Spam Calls தொல்லையா அப்போ போனில் இந்த செட்டிங் உடனே செய்யுங்க

Updated on 05-Nov-2024

Spam Calls தொல்லை மிகவும் அதிகரித்த வகையில் இருக்கிறது, ஸ்பேம் கால்கள் உங்கள் நேரத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல், உங்களை விரக்தியடையச் செய்கிறது. ஸ்பேம் கால்கள் முழு மனநிலையையும் கெடுத்துவிடும். இதனால் எங்களது முக்கிய பணிகளும் தடைபடுகிறது. அதாவது மார்க்கெட்டிங் அல்லது ஸ்பேம் காலால் அனைவரும் சிரமப்படுகின்றனர்.

இருப்பினும் இதுபோன்ற கால் தொல்லையிலிருந்து விடுபெற இது போன்ற காலை நிறுத்தமுடியும். டெலிமார்க்கெட்டிங் கால்கள் மட்டுமின்றி ஆட்டோமேட்டிக் கால்ஸ் மற்றும் மோசடி கால்களையும் நீங்கள் தடுக்கலாம். இந்த கால்களை நிறுத்த, மொபைலில் உள்ள செட்டிங் மாற்ற வேண்டும். ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பேம் காலைத் தவிர்க்க, ஆண்ட்ராய்டு பயனர்கள் சில செட்டிங்களை மாற்ற வேண்டும். இதற்குப் பிறகு, ஸ்பேம் கால்கள் தானாகவே தடுக்கப்படும். இதற்கு, முதலில் நீங்கள் போனின் டயலர் அல்லது கால் ஆப்பிற்கு செல்ல வேண்டும். இங்கே நீங்கள் மேல் வலது மூலையில் மூன்று-புள்ளி விருப்பத்தைக் காண்பீர்கள்.

SPAM CALL

Caller ID மற்றும் Spam Protection எப்படி ஆன் செய்வது?

  • போனில் இப்பொழுது இங்கு மூன்று டாட் தெரியும், இங்கு மூன்று டாட்டில் க்ளிக் செய்ய வேண்டும்
  • இப்பொழுது செட்டிங்கில் தட்ட வேண்டும்.
  • இங்கு உங்களின் Caller ID மற்றும் Spam Protection யின் ஆப்சன் தெரியும், இதை அழுத்த வேண்டும் அதன் பிறகு அதில் சில ஆப்சன் வரும்.
  • அதன் பிறகு செட்டிங்கில் ஆண் செய்யவும்.
  • சில ஆண்ட்ராய்டு போன்களில், ஸ்பேம் நம்பர்களை அடையாளம் காண, செட்டிங் இயக்குவதற்கான ஆப்சன் உள்ளது.
  • இதற்குப் பிறகு, ஸ்பேம் கால் பிள்ட்டரின் விருப்பத்தை ஆண் செய்ய வேண்டும்.
  • இந்த செட்டிங்கிர்க்கு பிறகு, ஸ்பேம் கால்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.

மூன்றாம் தரப்பு ஆப் உதவியுடனும் இதை செய்யலாம்.

இது ஸ்பேம் கால்களை முற்றிலுமாக நிறுத்தாது ஆனால் அது கணிசமாகக் குறைக்கிறது. இதற்காக, உங்கள் டெலிகாம் ஆபரேட்டரிடம் கோரிக்கை வைத்து DND சேவையை செயல்படுத்தலாம். இது ஸ்பேம் கால்களை கணிசமாகக் குறைக்கிறது. இது தவிர Truecaller போன்ற ஆப்களை நீங்கள் பயன்படுத்தலாம். Truecaller போன்ற மூன்றாம் தரப்பு காலர் ஆப்களில் ஸ்பேம் கால்கள் மற்றும் மெசேஜ்களை ப்ளாக் செய்ய உதவுகின்றன.

இதையும் படிங்க: Jio, Airtel, மற்றும் VI நவம்பர் 1 முதல் OTP ப்ளாக் செய்யாது புதிய காலகெடு என்ன

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :