Delhi Election 2025 :வோட்டர் ID ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி

Updated on 11-Jan-2025

Delhi Election 2025 :வோட்டர் ID ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி டெல்லியில் தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடக்க இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) முடிவெடுத்துள்ளது மற்றும் இந்த தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 8 அன்று வெளிட்யிடும் அதாவது தமிழ்நாட்டில் மட்டும் தமிழர்கள் இருப்பதில்லை இந்தியாவில் பல இடங்களில் தமிழர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் வசிக்கும் பல்லாயிர கணக்கான உறவினர்கள் டெல்லியில் வசித்து வருகிறார்கள் அந்த வகையில் பெரும்பாலோனோர் டெல்லியில் குடியுரிமை இருக்கிறது, அந்த வகையில் 2025 ஆண்டின் தேர்தலில் உங்கள் உரிமையை நீங்களும் கொடுக்கலாம்

இந்தியாவின் ஜனநாயக அமைப்பில் வாக்களிப்பது இன்றியமையாத அங்கமாகும். 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தேர்தல் காலத்தில் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிகாலாம் எனவே நீங்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர் மற்றும் ஆன்லைனில் வோட்டர் id அப்ளை செய்ய விரும்பினால் அது எப்படி செய்வது என தெரியாமல் இதோ உங்களுகவே கொண்டுவந்துள்ளோம் இதை தவிர உங்கள் பெயர் வோட்டர் id தொலைந்து போனால் அதி எப்படி ஆன்லைல் எப்படி பெறுவது என பார்க்கலாம் வாங்க

how to apply voter id card online 2

ஆன்லைனில் வோட்டர் ID கார்ட் அப்ளை செய்வது எப்படி?

  • முதலில் https://voters.eci.gov.in/யில் செல்லவும்
  • அந்த பக்கத்தில் வலது புறத்தில் மேல் மூலையில் Register என்பதை க்ளிக் செய்யவும்.
  • குறிப்பிட்டுள்ளபடி உங்கள் மொபைல் நம்பர் , ஈமெயில் முகவரி (விரும்பினால்) மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும். ‘Continue’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் முதல் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும். பாஸ்வர்ட் அமைத்து உங்கள் பாஸ்வர்ட் உறுதிப்படுத்தவும். ‘ஓடிபி ரெகுவஸ்ட்’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடியில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும். தொடர ‘check’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்துள்ளீர்கள். உங்கள் புதிய நற்சான்றிதழ்களைத் தொடர, லாகின் பக்கத்திற்குத் திரும்பலாம்.
  • லாகின் பக்கத்தில், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா கோடை உள்ளிடவும்.
  • உங்கள் மொபைல் நம்பரில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு ‘சரிபார்த்து லாகின் ‘ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • ஹோம் பக்கத்தில், ‘பொது வாக்காளர்களுக்கான புதிய பதிவு’ என்ற தலைப்பில் உள்ள பகுதியைக் கண்டறியவும். ‘Fill Form 6’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • Form 6 யின் அனைத்து விவரங்களையும் ‘தேர்ந்தெடு மாநிலம், மாவட்டம் & ஏசி’, ‘தனிப்பட்ட விவரங்கள்’, ‘உறவினர்கள் விவரங்கள்’, ‘கான்டேக்ட் விவரங்கள்’, ‘ஆதார் விவரங்கள்’, ‘பாலினம்’, ‘பிறந்த தேதி விவரங்கள்’ மற்றும் ‘தற்போதைய முகவரி விவரங்கள்’. தேவையான டாக்யுமென்ட் தேவையான இடங்களில் அப்லோட் செய்யலாம்.
Digital Voter Card

டூப்ளிகேட் வோட்டர் எத்தகைய சூழ்நிலையில் அப்ளை செய்வது?

அட்டை திருட்டு
அட்டை தொலைந்தது
அட்டை கிழிந்தால்

டூப்ளிகேட் வோட்டர் ID பெறுவது எப்படி

  • உங்கள் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று EPIC-002 நகல் வாக்காளர் அடையாள அட்டை டவுன்லோட் பார்மை சேகரித்து நிரப்பவும். EPIC-002 என்பது வாக்காளர் அடையாள நகலைக் கோருவதற்கான விண்ணப்பப் படிவமாகும்.
  • முகவரி, தொடர்பு, பெயர் மற்றும் வாக்காளர் அடையாள எண் போன்ற கட்டாயத் தகவல்களை நிரப்பவும்.
  • பார்முடன் தொடர்புடைய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கவும்.
    உங்கள் விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்க ஒரு குறிப்பு நம்பரை பெறலாம் .
  • விண்ணப்ப வெரிபிகேசன் பிறகு, தேர்தல் அலுவலகம் உங்களுக்கு நகல் வாக்காளர் அடையாளத்தை வழங்கும்.
  • உங்கள் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றவுடன், தேர்தல் அலுவலகத்திலிருந்து அறிவிப்பைப் பெறலாம் .
  • உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :