வீட்டிலிருந்தபடி E-PAN CARD எப்படி உருவாக்குவது?

Updated on 11-Nov-2024

PAN கார்ட் என்பது அனைவருக்கும் தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும், பேங்கிங் வாங்குதல் கொடுத்தலுக்கு இது முக்கியமான ஆவணமாகும் மேலும் ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேரும்போது PAN கார்ட் அவசியம் தேவைப்படும். இது போன்ற சூழ்நிலையில் வீட்டிலிருந்தபடி 10 நிமிடத்தில் பேன் கார்ட் உருவாக்க முடியும்

ஆனால் PAN கார்ட் வேண்டுமானால் ஆதார் கார்ட் அவசியமாகும். இ-பான் கார்டை ஆதார் மூலம் மட்டுமே உருவாக்க முடியும். இ-பான் கார்டு தொடர்பாக எந்தவிதமான குழப்பமும் இருக்கக்கூடாது. பான் கார்டுக்குப் பதிலாக இ-பான் கார்டைப் பயன்படுத்தலாம். பான் கார்டில் ஒரு சிறப்பு நம்பர் உள்ளது. இந்த சிறப்பு நம்பர் உங்கள் பான் நம்பரை அடையாளப்படுத்துகிறது. இதில் ஆங்கில வார்த்தைகள் மற்றும் நம்பர்கள் உள்ளன.

E-PAN கார்டு எப்படி உருவாக்குவது?

  • இதற்க்கு முதலில் https://www.incometax.gov.in/iec/foportal/ யில் செல்ல வேண்டும்.
  • இப்பொழுது அந்த பக்கத்தை ஸ்க்ரோல் செய்ய வேண்டும், அங்கு கீழ் பக்கத்தில் instant E-PAN என்ற ஆப்சன் தெரியும்.
  • இதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும், அதன் இடது பக்கத்தில் Get New e-PAN யின் ஆப்சன் தெரியும், அதில் நீங்கள் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு நீங்கள் உங்களின் ஆதாரின் 12 டிஜிட் நம்பர் போடவும்.
  • அதன் பிறகு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள confirm that ஆப்சனில் தட்டவும்.
  • இதன் பிறகு உங்களின் ஆதர் லிங்க் செய்யப்பட்ட மொபைல் நம்பரில் OTP வரும்.
  • அதன் பிறகு OTP போட்டு வெரிபை செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு ஈமெயில் ID போடவும் போடவும் மற்றும் பான் கார்ட் தகவலை போடவும்.
  • பார்மை பூர்த்தி செய்த சிறிது நேரம் கழித்து உறுதிப்படுத்தல் நம்பரை பெறுவீர்கள். அதைப் பாருங்கள். தகவல் சரியாக இருந்தால், டவுன்லோட் ஆப்ஷன் மூலம் பான் நம்பரை பெறலாம்.
  • இந்த பென்கார்டை நீங்கள் ரெகுலர் பேன் கார்ட் போல பயன்படுத்தலாம்.

குறிப்பு :- இ-பான் கார்டுக்கு விண்ணப்பித்த பிறகு, நீங்கள் வருமான வரி வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும், அங்கு நீங்கள் “செக் ஸ்டேட்டஸ்/டவுன்லோட் பான்” விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் PAN கார்டு PDF வடிவில் டவுன்லோட் செய்யப்படும்.

இதையும் படிங்க :IRCTC இந்த வசதியால் நீங்களும் உங்க வீட்டுக்கு போய் தீபாவளி கொண்டாடலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :