ஆச்சரியம் அளிக்கும் செயலாக, ஃபிளிப்கார்ட், ஏர்டெல்-இன் சர்ச்சைக்குரிய ஏர்டெல் ஜீரோ துவக்க முயற்சியில் இருந்து வெளியேறி உள்ளது. மாபெரும், இணைய வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், இந்த முயற்சியோடு இணைந்து இருந்ததற்காக, அதன் உபயோகிப்பாளர்களின் விமர்சனங்களை சந்தித்து. இந்த முயற்சி, இணைய நடுநிலை என்ற கருத்துக்கு எதிரான ஒன்று என்று பலர் கருதுகின்றனர். ஃபிளிப்கார்ட்-இன் இந்த முயற்சியின் காரணமாக,பலர், ப்ளே ஸ்டோர்-இல், ஃபிளிப்கார்ட் பயன்பாட்டை, குறைவாக மதிப்பிட்டனர்.
இது குறித்து ஃபிளிப்கார்ட்-இன் அறிக்கை கீழ் வருமாறு:
ஃபிளிப்கார்ட்-இல் நாங்கள், இணைய நடுநிலை என்ற கருத்தை உறுதியாக நம்புகிறோம். ஏனெனில்,
எங்கள் இருப்பு, இணையம் என்ற ஒன்றின் காரணமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக, ஜீரோ ரேட்டிங் குறித்து, உள்ளேயும், வெளியேயும் நிறைய விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. எங்களுக்கு இதன் விளைவுகள் குறித்து ஒரு ஆழமான புரிதல் இருக்கின்றது. இதை அடிப்படையாக கொண்டு, நாங்கள் கீழ் கண்டவாறு முடிவு செய்துள்ளோம்.
ஏர்டெல் ஜீரோ குறித்து, ஏர்டெல்-உடன் நடைபெற்று வரும் விவாதங்களில் இருந்து நங்கள் வெளியேற இருக்கிறோம்.
இந்தியாவில், இணைய நடுநிலை என்ற பெரிய காரணத்துக்காக நாங்கள் செயல்படுவோம், அடுத்த சில நாட்களில், இதற்கான செயல் விவரங்கள் குறித்து நாங்கள் உள் கலந்துரையாடல்கள் மேற்கொள்வோம்.
இணைய நடுநிலை என்ற நிலையை உறுதி செய்யவும், அது இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், அதன் அளவையோ, அது தரும் சேவையையோ கருத்தில் கொள்ளாமல், எவ்வித பாகுபாடுமின்றி ஒரே விதமாக பயன்படவும், நாங்கள் செயல்படுவோம்.
ஆர்வத்தை தூண்டும் விதமாக, ஃபிளிப்கார்ட் இதற்கு சற்று முன்னர், இந்த செயல் இணைய நடு நிலைமைக்கு எதிரானது அல்ல என்று கூறிய பிறகு, இந்த எதிர்பாரா திருப்பம் வந்துள்ளது. பத்திரிக்கை செய்திகளும், உபயோகிப்பாளர்களின் விம்சர்னங்கள் என இரண்டும் சேர்ந்து, இந்த இணைய வர்த்தக நிறுவனத்தை, இந்த முடிவிற்கு தூண்டியதாக தெரிகின்றது.
இது குறித்த அண்மைய முன்னேற்றங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
இணைய நடுநிலை: தொலைத்தொடர்பு குழு, அடுத்த மாதம் அறிக்கை சமர்பிக்க இருக்கிறது
இணையம் அனைத்து மனித இனத்துக்கும் சொந்தமானது: இணைய நடுநிலை குறித்து டாக்டர். ரவிஷங்கர் பிரசாத்
இணைய நடுநிலையால் நடக்கக் கூடியதென்ன?
ஏர்டெல் ஜீரோ இணைய நடுநிலையை மீறவில்லை: பாரதி ஏர்டெல்