பாரதி ஏர்டெல், அதன் ஏர்டெல் ஜீரோ முயற்சி, இணையநடு நிலைக்கு எதிரானது, என்ற செய்தியை மறுக்கும் விதமாக அது குறித்த ஆதரவு கருத்துகளை வெளியிட்டுள்ளது. இது போன்ற முயற்சிகள் இணைய நடுநிலையைப் மீறுகின்றன என்பது போன்ற அறிக்கைகள், இணையத்தில் நிறைய கொட்டி கிடக்கின்றன. இதோ, இதைப் பற்றிய எங்கள் அறிக்கை: இணைய நடுநிலையால் நடக்கக்கூடியதென்ன?
அதேவேளையில், ஏர்டெல்-இன் முழு அறிக்கையையும் காணுங்கள்:
ஏர்டெல் ஜீரோ- இணையத்தை இன்னும் அதிகமானோருக்கு கிடைக்க செய்வதோடு, புது முயற்சிகளுக்கான இயக்கக் காரணியாகவும் இருக்கிறது
ஏர்டெல் ஜீரோ, குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டு நாட்களே ஆகின்றன. புதுமையான, திறந்த சந்தை தளமாக இருக்கும் இதன் மூலமாக, வாடிக்கையாளர்கள், கைப்பேசி பயன்பாடுகளை இலவசமாக பயன்படுத்தலாம். இந்த முயற்சியின் இணைய நடுநிலை குறித்து நாங்கள் ஒரு பெரிய மற்றும் தேவையில்லாத விவாதத்தை காண்கிறோம்.
இந்த முயற்சியின் விமர்சகர்களின் கருத்துகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில், சில விஷயங்களை தெளிவு படுத்தி, ஏர்டெல் ஜீரோ குறித்த சில செய்திகளை சொல்லி, அது வாடிக்கையாளர்களுக்கும், இந்த துறைக்கும் அளிக்கும் நன்மைகளை பேசுவது பொருத்தமானது.
முதலாவதும், முக்கியமானதுமான செய்தி: ஏர்டெல் ஜீரோ எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமானது. அனைத்து விற்பனையாளர்களாலும் அணுக கூடியது. ஆம் –பெரியவர், சிறியவர் பேதமில்லாமல், அனைவருக்கும் உரியது.
சொல்லப்போனால் நாங்கள் ஏப்ரல் 6 அன்று ஏர்டெல் ஜீரோ குறித்த அறிவிப்பு வெளியிட்டோம். 150-க்கும் மேற்பட்ட தொடக்க நிலை நிறுவனங்கள்- அதிக அளவு சிறிய தொடக்க நிலை நிறுவனங்கள் – எங்களை தொடர்பு கொண்டு இந்த முயற்சி குறித்து விசாரித்தனர். ஒவ்வொருவரும், இந்த முயற்சி தங்களுக்கு எவ்வளவு அருமையான தளத்தை அளிக்கிறது என்றும், பெரிய நிறுவனங்களோடு போட்டியிட தங்களுக்கு இது சம வாய்ப்பளிக்கிறது என்றும் பகிர்ந்து கொண்டதை இவ்விடத்தில் பதிவு செய்கிறோம். சராசரியாக,ஏர்டெல் ஜீரோ இவர்களின் விற்பனை செலவுகளை முக்கால்வாசியாக குறைக்கிறது. இது அவ்வளவு மோசமல்ல என்று நான் நினைக்கிறேன். ஒரு சிலர் வேறு மாதிரி நினைக்கலாம்.
இந்த முயற்சி குறித்து அதிக அளவு தவறான செய்திகள் உள்ளன. இணைய நடுநிலை என்ற கருத்தே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் போது, இந்த முயற்சி குறித்த புரிதல் ஒன்றும் ஆச்சர்யமளிக்கவில்லை. ஏர்டெல் ஜீரோ குறித்த சில கட்டுக்கதைகளை இப்போது நாம் உடைப்போம் கட்டுக்கதை உண்மை சலுகை சார்ந்த அணுகுமுறையை இந்த கருத்துரு ஒத்து இருக்கிறது இல்லவே இல்லை.
ஏர்டேல் ஜீரோ அனைவருக்கும் அனுமதி அளிப்பதோடு, அனைத்துவாடிக்கையாளர்களுக்கும் இலவசமானது. இங்கு வருவதா, வேண்டாமா என முடிவு செய்யும் உரிமை வாடிக்கையாளர்களுக்கு உண்டு.
அதிக பட்ஜெட் கொண்ட பெரிய நிறுவனங்கள் ஆதரிக்கப்படுவதோடு, சிறிய தொடக்க நிலை நிறுவனங்கள் போட்டியில் இழக்க நேரிடும். இல்லை. உண்மை வேறு விதமாக இருக்கிறது. நிறைய தொடக்க நிலை நிறுவனங்கள் எங்களை தொடர்பு கொண்டு, இது போன்ற தளத்தை கட்டுவித்ததற்காக எங்களை வாழ்த்தியது. இந்த தளம் அவர்கள் பொருட்களுக்கான விற்பனை செலவுகளை பெருமளவு குறைக்கிறது. 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்களோடு தொடர்பில் இருப்பதோடு, இந்த முயற்சியில் பங்கெடுக்கவும் விரும்புகின்றன.
சிறிய தொடக்க நிலை நிறுவனங்களால் தரவுகளுக்கான தொகையை செலுத்த முடியாது.
ஏன் முடியாது? இன்றைய நாளில், ஒரு பயன்பாட்டை தறவிரக்கி உபயோகித்தால், தோராயமாக, 20-30 எம்பி தரவு செலவாகிறது. ஒரு எம்பிக்கு ஒரு ருபாய் என வைத்து கொண்டால், இது 20 ரூபாய் என வரும். இதை விட பெரிய ஊடகம்/இணையத்தில் மூலமாக விளம்பரப்படுத்தினால், சராசரியாக ஒரு தரவிறக்கத்திற்க்கு 50-இல் இருந்து 300 ரூபாய் வரை செலவாகும். எனவே இந்த தளம், சிறிய நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விநியோகம் செய்வதையும், மற்றவர் பார்வைக்கு கொண்டு செல்வதையும் எளிதாக்குகிறது.
டெலிகாம் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் உபயோகித்த தரவுகளுக்கு, பிற நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவர். இது பணம் சம்பாதிக்க ஒரு வழி.
டெலிகாம் நிறுவனங்கள், பல ஆண்டுகளாக வர்த்தகர்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்டணமில்லா அழைப்பு சேவைகளை தருகின்றது. இவ்வாறான சேவைகளில், வாடிக்கையாளர் அழைப்புக்கு வர்த்தகர்கள் பணம் தருகிறார்கள். ஏர்டெல் ஜீரோ, இது போன்ற ஒரு கருத்துருவாகும்.
ஏர்டெல் ஜீரோ இணைய நடுநிலைக்கு எதிரானது. தரவுகளுக்கு பணம் கொடுக்க வல்லோர்க்கு நன்மை அளிப்பது. ஏர்டெல் ஜீரோவிற்கும் இணைய நடு நிலைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இலவசமாக வழங்கப்படுவதோடு, அனைவருக்கும் ஒரே வேகத்தையும் தருகிறது. எல்லா தரவுக்கும், எந்த பாகுபாடுமின்றி ஒரே விதமான கட்டணமே அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் பெறப்படுகிறது.
ஏர்டெல் ஜீரோ-வில் இல்லாத பயன்பாடுகளுக்கான இணைய வேகம் குறைக்கப்படும். முழுவதும் தவறு. பல்வேறு பயன்பாடுகளை உபயோகிக்க,இணைய வேகத்தில் எந்தவொரு வித்தியாசமும் தரப்படுவதில்லை. அது ஏர்டெல் ஜீரோ-வில் இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி.
தற்போது, ஒரு சில கைப்பேசி கருவிகளில் 50 அல்லது அதற்கும் மேற்பட்ட பயன்பாடுகளை சேமித்து கொள்ள முடியும், ஒரு சிலவற்றில் ஐந்து மட்டுமே சேமிக்க இயலும், ஒரு சிலவற்றால் அது கூட செய்ய இயலாது. இணைய நடுநிலை என்றால் அனைத்து கருவிகளும் ஒரே விதமான நிர்ணயங்களோடு உருவாக்கப்பட்டு, ஒரே விலையில் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டுமா? இது இணையத்தை நடுநிலையாக்கி விடுமா?
இணையத்தை உபயோகிக்க 2ஜி,3ஜி, 4ஜி எனப் பல்வேறு கைப்பேசி தொழில்நுட்பங்கள் உள்ளன. இணைய நடு நிலை என்ற பெயரில், இவை அனைத்தும் ஒரே வேகத்தோடும், ஒரே விலையோடும் இருக்க வேண்டுமா?
ஒரு சில வாடிக்கையாளர்கள் எவ்வளவு அதிகமான தரவை வாங்குகிறார்களோ அதற்கு தகுந்த மலிவான தரவு கட்டணங்களை செலுத்துகிறார்கள். இணைய நடு நிலை என்றால் இவர்கள் அனைவரும், அவர்கள் உபயோகிக்கும் இணைய தரவு அளவை கணக்கில் கொள்ளாமல் ஒரே கட்டணத்தை செலுத்த வேண்டுமா?
இறுதியாக, கடந்த சில நாட்களாக நடைபெற்ற விவாதம், ஒரு செய்தியை தெளிவாக உணர்த்துகிறது- நிறைய மக்கள், இணைய நடுநிலை குறித்து ஒரு தெளிவான கருத்தைக் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக, வல்லுனர்கள் என்று தங்களை அழைத்து கொள்பவர்கள், அடிப்படை ஆதாரமே இல்லாத விவாதங்களை மேற்கொள்ள வசதியாக இருக்கிறது. அவர்களுடைய கருத்து முக்கியமாக இருந்தாலும், இன்னும் அறிவு சார்ந்த மற்றும் நுணுக்கமான விவாதம் தேவை. வெறும் சொற்களால் ஆன ஒரு கருத்தை உருவாக்காமல், காரணம் சார்ந்த கருத்தாக இருக்க வேண்டும்.
மேலே சொன்னவற்றில் இருந்து, இந்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா என்ற முயற்சிக்கு பங்களிக்க,இது ஒரு மேம்பட்ட வழியாகும். ஏர்டெல் ஜீரோ போன்ற ஒரு திறந்த வெளி மற்றும் புதுமையான தளம் இதற்கு முன்னர் அளிக்கப்படவில்லை. இது இலவச உபயோகத்தின் மூலமாக இணைய பயன்பாட்டை அதிகரிக்க உதவும்.(நிறுவனங்களும், குறுஞ்செயலி உருவாக்குபவர்களும் இதில் சம பங்காளர்கள்).
குறைந்த செலவுடைய, பாகுபாடற்ற தளத்தை, குறிப்பாக சிறிய நிறுவனங்களுக்கு வழங்குவதால், இணைய வெளியில் மற்றும் கைப்பேசிகளுக்கான பயன்பாடு வெளியில் இது புதுமையை புகுத்த வல்லது. உண்மையில், ’இந்தியாவில் செய்யுங்கள், இந்தியாவுக்காக செய்யுங்கள்.’ என்ற கருத்திற்கு இது இயக்கம் தர வல்லது.