பொங்கல் ரிலீஸ் சிறப்பு படங்கள் இந்த படங்களை பார்த்து இந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்

பொங்கல் ரிலீஸ் சிறப்பு படங்கள் இந்த படங்களை பார்த்து இந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்

பொங்கல் பண்டிகை அருகில் வந்த நிலையில் பலரும் பொங்கலுக்க்கான பிளானும் சிறப்பகவே நடந்து வருகிறது, அந்த வகையில் தை திருநாளின் மிக பெரிய பண்டிகையான பொங்கல் தமிழ்நாட்டின் சிறப்பு திருவிழாவில் ஒன்றாகும் அந்தவகையில் பொங்கலுக்கு ரிலீசாகும் படங்களும் மிக பெரிய ஸ்பெசல் ஆகும் அந்த வகையில் தல அஜித் குமார் நடித்த் திரைப்படம் நமக்கு ஏமாற்றத்தை தந்து இருந்தாலும் அதை தவிர இந்த பொங்கலுக்கு வரிசைகட்டி ஐந்து படங்கள் வரிசையில் இருக்கிறது அதாவது விசாலின் மத கஜ ராஜா, வணங்கன்,காதலிக்க நேரமில்லை,நேசிபய மற்றும் மெட்ராஸ் காரன் என பல இடங்கள் இருக்கிறது இந்தில் இந்த படத்தை பார்த்து மகிழுங்க.

மத கஜ ராஜா

சுந்தர் C இயக்கத்தில் வெளி வர இருக்கும் மத கஜ ராஜா சமிபத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் விஷால் சமிபத்தில் தன் பட உடல் நிலையும் பொருட்படுத்தாமல் ப்ரோமொசனுக்கு சென்றார, இந்த படத்தில் விஷால் முக்கிய ரோலில் இதை தவிர இதில் வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பலமான துணை நடிகர்கள் நடித்துள்ளனர். படம் ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவையை ஒருங்கிணைத்து, பொழுதுபோக்கு மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கமர்ஷியல் ஹிட்களை உருவாக்குவதில் சுந்தர் சியின் சாமர்த்தியம் மற்றும் விஷாலின் ஆற்றல்மிக்க நடிப்பால், ஜாலியான, அதிரடியான சவாரிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படம் ஜனவரி 12-ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது,

வணங்கன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருக்கும் பாலா இயக்கததில் தயாராகியுள்ள படம் வணங்கான். முதலில் சூர்யா நடிப்பில் தயாரான இந்த படம், ஒரு கட்டத்தில் சூர்யா விலகியதால் அருண் விஜய் நடிப்பில் தயாராகியுள்ளது. மேலும் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.

காதலிக்க நேரமில்லை

சமீபகாலமாக பெரிய வெற்றிப்படம் கொடுக்க முடியாமல் தவித்து வரும் ஜெயம் ரவி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்துள்ள படம் காதலிக்க நேரமில்லை. நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 14-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.

நேசிப்பாயா

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், அதர்வா தம்பி ஆகாஷ் நாயகனாக நடித்துள்ள படம் நேசிப்பாயா. அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், சரத்குமார், பிரபு, குஷ்பு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜனவரி 14-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.

மெட்ராஸ்காரன்

மெட்ராஸ்காரன் இப்படத்தின் இயக்குனர் மோகன் தாஸ் இயக்கத்தில் வெளியாக உள்ளது, மெட்ராஸ்காரன், கிஷன் தாஸ், ஸ்மிருதி நடித்துள்ள தருணம், ஆகிய படங்களும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக முன்னணி நடிகர்களின் ஓரிரு படங்கள் மட்டுமே வெளியாகி வந்த பொங்கல் தினத்தில், இந்த ஆண்டு, இவ்வளவு படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. இது ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது

இதையும் படிங்க: This week OTT movies: இந்த வாரம் OTT இந்த படங்களை ஜாலியா பார்த்து மகிழுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo