ஒவ்வொரு வராமும் வீக் எண்டை நாம் நண்ம்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் OTT யில் புதிய படத்திற்கு காத்து கொண்டிருப்பார்கள் அவர்களை குஷி படுத்தும் வகையில் இந்த வாரம் பல படங்கள் வரிகட்டி லைனில் இருக்கிறது அவை தங்களுக்கு பிடித்த் OTT தளங்கள் Netflix , jiohotstar, amazon prime வீடியோ போன்ற OTT தலத்தில் பார்க்கலாம் அந்த லிஸ்டில் தியேட்டரை கலக்கிய டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற பல படங்கள் list இருக்கிறது
டிராகன் இது தமிழ் காமெடி கலந்த திரைப்படமாகும் இது கடந்த மாதம் பிப்ரவரி 21 தியேட்டரில் வெளியானது, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த ‘டிராகன்’ திரைப்படம், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ஒரு பிஸ்னஸ் ரீதியான பொழுதுபோக்கு திரைப்படமாகும். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி.ஜே. சித்து, ஹர்ஷத் கான், கயாது லோகர், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் மார்ச் 21 அன்று NETFLIX யில் பார்க்கலாம்.
தனுஷின் NEEK திரைப்படம், கடந்த கால பிரிவிலிருந்து மீள முடியாத ஒரு இளைஞனான பிரபுவைச் சுற்றி நிகழும் ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். அவரது குடும்பத்தினர் அவரை நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு வற்புறுத்தும்போது, அவர் தனது முன்னாள் காதலியின் திருமணத்தில் கலந்துகொள்வதன் மூலம் ஒரு முடிவுக்கு வர முடிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படம், அமேசான் பிரைம் வீடியோவில் டிஜிட்டல் முறையில் அறிமுகமாகும்.
நடிகர்கள் : Sathyaraj, Yogi Babu, Pragya Nagra
ரிலீஸ் தேதி March 21
நீங்கள் ஒரு குடும்பம் திரைப்படம் பார்க்க விரும்பினால் நீங்கள் Baby and Baby படத்தை பார்க்கலாம்,இரண்டு குடும்பங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன, ஆனால் எதிர்பாராத கலவையானது அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. ஒரு குழந்தை ஒரு செல்வத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டால், பொறாமை கொண்ட உறவினர்கள் அவருக்கு எதிராக சதி செய்கிறார்கள். பிரதாப் இயக்கிய பேபி அண்ட் பேபி Sun NXT யில் பார்க்கலாம்.
ரிங் ரிங் படத்தில் , சிறுவயது நண்பர்கள் க்ரூப் ஒன்று தங்கள் துணைவர்களுடன் பிறந்தநாள் விழாவிற்காக மீண்டும் இணைகிறது. இருப்பினும், பாதிப்பில்லாத ஒரு விளையாட்டு அவர்களை கால்கள் மற்றும் மெசேஜ்களை வெளிப்படுத்த கட்டாயப்படுத்துகிறது, இது அவர்களின் உறவுகளை சோதிக்கும் எதிர்பாராத வெளிப்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. இந்த படம் அக்ஷய் குமாரின் கேல் கேல் மெய்ன் படத்தால் ஈர்க்கப்பட்டு விரைவில் ஆஹா தமிழில் கிடைக்கும்.
இதையும் படிங்க Good Bad Ugly: தல அஜித் நடிக்கும் ஆக்ஷன்-கலந்த காமெடி திரைப்படம் இந்த தேதியில் வருகிறது மக்களே ரெடியா