இந்த வாரம் OTT யில் வர இருக்கும் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸில் போன்றவற்றை உங்களுக்கு பிடித்த OTT தளமான Amazon Prime Videos, Tentkotta, Disney+ Hotstar யில் பார்க்கலாம். மக்கள் மனதை கவர்ந்த அமரன் இந்த வாரம் OTT யில் வருகிறது, இதை தவிர OTT யில் வரும் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ் பற்றி பார்க்கலாம்.
இப்படத்தில் சிவகர்த்திகேயன் ராணுவ வீரராகவும் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் இப்ப்டத்ததை தயாரித்துள்ளார் மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த வெண்ணிலவு சாரல் பாடலை முணுமுணுக்காத ஆளே இல்லை அதே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்துத்துள்ளது இப்படத்தின் டிசம்பர் 5 அன்று OTT யில் ரிலீஸ் ஆகிறது.
கங்குவா 2024 இந்த திரைப்படம் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளிவந்துள்ளது, இதில் சூர்யா முக்கிய ரோலில் நடித்துள்ளார், கங்குவா திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிகர் சூரியா நடித்துள்ளார் மற்றும் பாபி தியோல் இதில் வில்லனாக நடித்துள்ளனர் மேலும் இப்படத்தின் ஹீரோயின் திஷா பதானி ஆவார் மேலும் இப்படத்தில் துணை நடிகர்கள் நடராஜன் சுப்ரமணியம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் பேனர்களின் கீழ் கே.இ.ஞானவேல் ராஜா, வி.வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பளபதி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் தற்பொழுது Amazon Prime வீடியோவில் இது ஸ்ட்ரீமிங் செய்யப்படும் இது டிசம்பர் 13 வெளியாகும் என கூறப்படுகிறது மேலும் amazon அதிகாரபூர்வமான தேதியை வெளியிடவில்லை.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த பிரதர் என்ற தமிழ் திரைப்படம் நடிகரின் 30வது படமாக உருவாகும் குடும்ப திரைப்படமாகும் . இதில் பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.இது தற்பொழுது ZEE5 OTT யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
அக்னி ஒரு தீயணைப்பு வீரரான வித்தல் மற்றும் அவரது மைத்துனர் சமீத், ஒரு முக்கிய போலீஸ்காரர், நகரத்தை மூழ்கடிக்கும் ஒரு பெரிய தீயில் சிக்கியவர்களைக் காப்பாற்ற அவர்கள் ஒன்றிணைந்த கதையை அடிப்படையாகக் கொண்டது. ராகுல் தோலாகியா இயக்கிய இந்தத் தொடரில் பிரதீக் காந்தி, திவ்யேந்து மற்றும் ஜிதேந்திர ஜோஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் சீரிஸ் பிரைம் வீடியோவில் டிசம்பர் 6, 2024 அன்று வெளியிடப்படும்.
ஜிக்ரா ஒரு பெண்ணின் கதை, சத்யா, தனது தம்பியை சிறையில் இருந்து விடுவிக்கும் பணியில் செல்கிறாள். இந்த படத்தில் ஆலியா பட் மற்றும் வேதாங் ரெய்னா நடிக்க உள்ளனர். இந்தப் படம் வரும் டிசம்பர் 6-ம் தேதி நெட்ஃளிபிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
இதையும் படிங்க:OTT release : இந்த வார வீக் எண்டு சூப்பர் படங்கள் லிஸ்ட் இதோ