இந்த புதிய ஆண்டில் பல படங்கள் வர தயாராக இருக்கும் நிலையில் இந்த வாரம் OTT திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் மேலும் பல திரைப்படங்கள் பொங்கலுக்கு வரிசைகட்டி இருக்கிறது மேலும் நீங்கள் அந்த வகையில் இந்த வாரம் எந்த எந்த படங்கள் எந்த OTT யில் வருகிறது என பார்க்கலாம் வாங்க, அதை உங்களுக்கு பிடித்த OTT தளமான Disney+Hotstar, ஆஹா தமிழ் மற்றும் amazon prime வீடியோ போன்ற தளங்களில் பார்க்கலாம் சரி வாங்க இந்த வாரம் டிசம்பர் 30,2024 லிருந்து ஜனவரி 4,2025 வரை இருக்கும் இந்த வாரம் என்ன என்ன திரைப்படங்கள் லிஸ்ட்டில் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
ஜோலியோ ஜிம்க்கான இந்த திரைப்படம் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகியுள்ளது, இது க்ரைம் காமெடி திரைப்படமாகும், இதில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி, யோகி பாபு, யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், சாய் தீனா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில், பிரபுதேவா சாப்பாட்டுக் கடை நடத்தும் நான்கு பெண்களின் கைகளில் சிக்கிக் கொள்வதை போல நடித்துள்ளார்.
உப்பு புளிகாரம் இது வெப் சீரிஸ் ஆகும், இதில் இரண்டு வயதான தம்பதினருக்கு ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார்கள் அவர்களுக்கு நான்கு வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். இருப்பினும், மற்றொரு தாயிடமிருந்து தந்தையின் மகன் குடும்பத்துடன் வாழ வரும்போது அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது, இது டிராமாவில் குழப்பத்திற்கும் வழிவகுக்கிறது. தம்பதிகள் தங்கள் புதிய மகனைப் பற்றிய ரகசியத்தை வைத்திருப்பதோடு, ஒரு பிரபலமான நடிகராகவும் இருப்பதால், இந்தத் சீரிஸ் ஒவ்வொரு குடும்ப மெம்பர் வாழ்க்கை, குழந்தைகளின் காதல் வாழ்க்கை மற்றும் அவர்களின் தொழில் மற்றும் லட்சியங்கள் எவ்வாறு கடந்து செல்கிறது என்பதை மையமாகக் கொண்ட குடும்ப நாடகமாகும்.
தமிழ் திரையுலகில் முதல் முறையாக 2025 யில் பயாஸ்கோப் வெளியாகியுள்ளது. இதில் சங்ககிரி ராஜ் குமார் உடன் சங்ககிரி ராஜ்குமார், சத்யராஜ் மற்றும் சேரன் ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடிக்க, சங்ககிரி ராஜ்குமார் இயக்குகிறார். இந்தப் படம் கிராமத்து மக்கள் தங்கள் அடிப்படை அறிவைக் கொண்டு திரைப்படம் எடுக்க முயற்சிப்பதைச் சுற்றி வருகிறது.மேலும் இந்த பயாஸ்கோப் தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது அதன் பிறகு ஆஹா தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் இது முன்னதாகவே OTT உரிமைய வாங்கியுள்ளது
இதையும் படிங்க:Upcoming 2025 OTT:ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை வீட்டிலிருந்தபடி OTT யில் பார்க்கலாம்