இந்த வாரம் OTT மற்றும் தியேட்டரில் வர இருக்கும் சூப்பர் படங்கள்

Updated on 19-Dec-2024

இந்த வாரம் OTT திரைப்படம் மற்றும் வெப் சீரிஸில் போன்றவற்றை உங்களுக்கு பிடித்த OTT தளமான Amazon Prime Videos, Tentkotta, Disney+ Hotstar யில் பார்க்கலாம் இதில் OTT ரிலீஸ் படங்கள் மட்டுமல்லாமல் தியேட்டர் ரிலீஸ் விடுதலை 2 திரைப்படமும் இருக்கிறது அந்த வகையில் இந்த ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் இந்த வாரம் என்ன திரைப்படங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் ப்வாங்க

ட்விஸ்ட்டர்

டுவிஸ்டர்ஸ் என்பது 1996-ம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இப்படம் அமெரிக்காவின் டொர்னாடோ சந்து பின்னணியில் அமைக்கப்பட்டது ஜியோசினிமாவில் டிசம்பர் 18, 2024 யில் ஸ்ட்ரீமிங் தொடங்கும். லீ ஐசக் சுங் ட்விஸ்டர்ஸ் என்ற பேரழிவைத் திரைப்படமாக இயக்கினார் , மார்க் எல். ஸ்மித் திரைக்கதையை எழுதினார், மேலும் ஜோசப் கோசின்ஸ்கி கதைக்களத்தில் பங்களித்தார். சாஷா லேன், மௌரா டைர்னி, அந்தோணி ராமோஸ், பிராண்டன் பெரியா, க்ளென் பவல் மற்றும் டெய்சி எட்கர்-ஜோன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர் இப்படம் டிசம்பர் 18-ம் தேதி (நேற்று) ஜியோ சினிமா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

Girls Will Be Girls

சுசி தலாதி இயக்கிய இப்படம், பெண் கண்ணோட்டம் மற்றும் ஆணாதிக்க விதிகளுக்கு எதிரான போராட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. சுசி தலாதி இயக்கிய இதில் ப்ரீத்தி பாணிகிரஹி மற்றும் கனி கஸ்ருதி ஆகியோர் நடித்துள்ளனர். இது நேற்று டிசம்பர் 18 அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

நிறங்கள் மூன்று

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிறங்கள் மூன்று’. இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மேலும் இந்த திரைப்படம் இப்படம் நாளை (20-ந் தேதி) அமேசான் பிரைம், ஆஹா தமிழ், சிம்பிலி சவும் ஆகிய ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளது.

ஜீப்ரா

ஜீப்ரா இந்த திரைப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு அதன் பிறகு தமிழ் உட்பட பல மொழிகளில் ட்ரேன்ஸ்லேட் செய்யப்பட்டது மேலும் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்சயா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர் மேலும் இப்படம் நாலா டிசம்பர் 20 ஆஹா தமிழ் OTT தளத்தில் வெளியாகிறது.

விடுதலை 2

விடுதலை 2 திரைப்படம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் அதாவது இந்த திரைப்படம் முதல் பாகம் மிக பெரிய வெற்றிக்கு பிறகு இதன் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், இதில் வாத்தியார் (விஜய் சேதுபதி நடித்த) சக்தி வாய்ந்த கதையைத் தொடர்கிறது, அவரது கடந்த காலத்தை ஆழமாக ஆராய்கிறது மற்றும் அநீதிக்கு எதிரான அவரது கிளர்ச்சியை இயக்கும் நம்பிக்கைகள். குமரேசன் (சூரி நடித்தார்) ஒரு தார்மீக மோதலை எதிர்கொள்கிறார் , மேலும் இப்படத்திற்கு இசையமைப்பளர் இளையராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்ற படங்களுடன் டிசம்பர் 20, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது.

இதையும் படிங்க: Friday OTT: இந்த வாரம் சூப்பர் படங்களை பார்த்து என்ஜாய் பண்ணுங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :