OTT யில் இந்த வீக் எண்டுக்கான அட்டகாச Movies ஜாலியா என்ஜோய் பண்ணுங்க

OTT யில் இந்த வீக் எண்டுக்கான அட்டகாச Movies ஜாலியா என்ஜோய் பண்ணுங்க
HIGHLIGHTS

இந்த வார வீக் எண்டு வந்துவிட்டது இந்த வார லிஸ்ட்டில் OTT யில் என்ன என்ன படம் இருக்கிறது

ங்களின் Disney+hotstar, Netflix, Prime Video, Aha என உங்களுக்கு பிடித்த தளங்களில் பார்க்கலாம்.

இந்த வாரம் லிஸ்ட்டில் என்ன படங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

இந்த வார வீக் எண்டு வந்துவிட்டது இந்த வார லிஸ்ட்டில் OTT யில் என்ன என்ன படம் இருக்கிறது என்று அனைவரும் வருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அந்த வகையில் இந்த வாரம் உங்களுக்கு பிடித்த திரைப்படங்களை உங்களின் Disney+hotstar, Netflix, Prime Video, Aha என உங்களுக்கு பிடித்த தளங்களில் பார்க்கலாம். அந்த வகையில் இந்த வாரம் லிஸ்ட்டில் என்ன படங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

காடுவெட்டி | அமேசான் பிரைம்

காடுவெட்டி இந்த திரைப்படம் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் வெளியாகியது ஆர் கே சுரேஷ், சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், JSK கோபி என பல தமிழ் பிரபலங்கள் நடித்துள்ளனர் குடும்ப திரைப்படம்.ஆகும் இசையமைப்பாளர் சாதிக் (வணக்கம் தமிழா) மற்றும் ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைத்துள்ளனர். காடுவெட்டி திரைப்படம் 2024 மார்ச் 15ல் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ‘யூ/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

அஞ்சாமை -சிம்ப்ளி சவுத்

அஞ்சாமை – இயக்குனர் எஸ் பி சுப்புராமன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் விதார்த், ரஹ்மான், வாணி போஜன் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கின்றனர் இப்படத்தினை தயாரிப்பாளர் திருநாவுக்கரசு தனது ‘திருச்சித்ரம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை சிம்ப்ளி சவுத் OTT தளத்தில் வெளியாகியது ஜூலை 19 இலிருந்து பார்க்கலம்.

தி அகாலி | ஆஹா தமிழ்

தி அகாலி இந்த திரைப்படம் முகமது ஆசிப் ஹமீத் இயக்கத்தில் வெளியாகியது மேலும் இந்த படத்தில் நாசர், வினோத் கிஷான், அர்ஜை, ஸ்வயம் சித்தா என பலர்நடித்துள்ளனர் இந்த்த படம் திகிலூட்டும் திரில்லர் திரைப்படமாகும் இப்படம், ஒரு போலீஸ் அதிகாரியின் கண் வழியே பார்க்கப்படுவது போல படமாக்கப்பட்டிருந்தது. கடந்த மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜூலை 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ரயில் | டென்ட் கொட்டா

ரயில் – இயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளியாகியது இந்த படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமலா, ரமேஷ் வைத்யா என பலர் நடித்திருகின்றனர் இந்த படம், தற்போது டெண்ட்கொட்டா தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை, பார்க்கலாம் .ஜூலை 19 முதல் டெண்ட்கொட்டா தளத்தில் பார்க்கலாம்.

Harom Hara (Aha மற்றும் ETV Win)

1980 களில் எடுக்கப்பட்ட இந்த அதிரடி நாடகத்தில் சுதீர் பாபு, மாளவிகா சர்மா மற்றும் சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சுப்ரமணியம் சட்டவிரோத ஆயுத வியாபாரத்தில் ஈடுபடுகிறார். இந்த திரைப்பட ஜூன் 14, 2024, தியேட்டரில் வெளியானது அதனை தொடர்ந்து ஜூலை 18 முதல் Aha மற்றும் ETV Win யில் கிடைக்கும். மேலும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டது.

Hot Spot (Tamil movie – Telugu dub) – July 17

கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி, கௌரி ஜி. கிஷன், சுபாஷ் மற்றும் ஆதித்ய பாஸ்கர் ஆகியோரைக் காட்டும் ஒரு ஆந்தாலஜி படம். இது சிந்தனையைத் தூண்டும் கருப்பொருள்களுடன் நகைச்சுவை கலந்த நான்கு கதைகளைக் கொண்டுள்ளது. ஆஹாவில் கிடைக்கிறது. இந்த திரைப்படம் தமிழில் வெளியானது தொடர்ந்து இப்பொழுது தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஜூலை 17 வெளியானது

ஆடுஜீவிதம் நெட்ப்ளிக்ஸ்

ஆடுஜீவிதம் இந்த திரைப்படத்தின் நாயகனாக – மலையாள நடிகர் ப்ரித்வி ராஜ் நடித்திருக்கும் இந்த திரைப்படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பலரின் கவனத்தை கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்படுகிறது. தற்போது ஆடுஜீவிதம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போனதை தொடர்ந்து, ஒரு வழியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 19ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

இதையும் படிங்க OTT this week:இந்த வீக் எண்டை ஜாலியா என்ஜாய் பண்ணுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo