OTT this week:இந்த வீக் எண்டை ஜாலியா என்ஜாய் பண்ணுங்க

Updated on 06-Jul-2024
HIGHLIGHTS

OTT யில் பார்த்து மகிழ காத்து கொண்டிருப்பவர்களுக்கு சரியான வேட்டை என்று சொல்லலாம்

உங்களுக்கு பிடித்த் OTT தளங்களில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்

இந்த மாதம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிச்களின் லிஸ்டை பாருங்க

ஜூலை மாதம் பிறந்ததாச்சு பலர் இந்த வீக் எண்டில் திரைப்படங்களை OTT யில் பார்த்து மகிழ காத்து கொண்டிருப்பவர்களுக்கு சரியான வேட்டை என்று சொல்லலாம் இந்த மாதம் லிஸ்ட்டில் பல சூப்பர் திரைப்படங்கள் இருக்கிறது அவற்றை உங்களுக்கு பிடித்த் OTT தளங்களில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் அந்த வகையில் இந்த வார ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிச்களின் லிஸ்டை பாருங்க

July 1st week OTT movie list

கருடன்

கருடன் 2024 இந்தியன் தமிழ் அதிரடி திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை கருடன் இயக்குனர் R.S துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் K.குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை amazon prime விடியோ யில் ஜூலை 3,,2024 அன்று பார்க்கலாம்.

Mirzapur 3

மிர்சாபூரின் மூன்றாவது சீசன் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த வெப் சீரிஸை ஜூலை 5 முதல் பிரைம் வீடியோவில் பார்க்கலாம். குட்டு பையா மிர்சாபூரை ஆள்வாரா அல்லது கலீன் பாய்யா வலுவாக மீண்டும் வருவாரா என்ற கதையை மூன்றாவது சீசன் காட்டலாம். இந்த சீரிஸ் யில் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் போன்ற நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மலையாளி ஃப்ரம் இந்தியா

மலையாளி ஃப்ரம் இந்தியா இந்த திரைப்படத்தை முக்கிய இயக்குனர்களில் ஒருவர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. இவர் ஜன கண மன, குயின் போன்ற படங்களை இயக்கியுள்ளனர், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நிவின் பாலி நடித்துள்ளா அதனை தொடர்ந்து இந்த படத்தில் தியான் ஸ்ரீனிவாசன் மற்றும் அனஸ்வர ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் கடந்த மே 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது அதனை தொடர்ந்து இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தாமதமாகவே வெளியாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் வரும் 5ஆம் தேதி முதல் பார்க்கலாம்.

மகாராஜா (Maharaja – Netflix)

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மஹாராஜா திரைப்படம் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. விஜய் ஒருபுறம் இருக்க, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மஹாராஜா விஜய் சேதுபதியின் கேரியரில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. 15 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டவுள்ளது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, மஹாராஜாவின் OTT வெளியீட்டைப் பற்றிய சலசலப்பு சத்தமாக வளர்ந்து வருகிறது. தகவல்களின்படி, மஹாராஜா OTT வெளியீடு ஜூலை 19 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காத்திருக்கிறது.

Zwigato:

#Zwigato

பாலிவுட் நடிகர் கபில் ஷர்மா நடித்திருக்கும் படம், ஸ்விகாட்டோ (Zwigato). இந்த படத்தை நந்திதா தாஸ் இயக்கியிருக்கிறார். இந்த படம் ஜூலை மாதத்திற்குள் பிரபல Netflix ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்னி சாம்பார் (Chutney Sambar Disney+hotstar July,2024 )

அப்கம்மிங் தமிழ் வெப் சீரிஸ் யோகி பாபு நடிப்பில் வெளிவந்துள்ளது Disney+hotstar யில் வெளியாகும் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த ‘பொம்மை’ படம், ஜூன்16-ல் வெளியானது. இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சட்னி சாம்பார்’ என்ற படத்தை ராதாமோகன் இயக்குகிறார், இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் வாணிபோஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

Red Swan

தென் கொரிய நாடகமான ‘ரெட் ஸ்வான்’ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.. இது ஓ வான்-சூவின் கதையை சித்தரிக்கிறது. உலகப் புகழ்பெற்ற கோல்ப் வீராங்கனையான இவர் ஒரு நாள் பவர்ஃபுல் ஃபவுண்டேஷனின் தலைவரானார். அவள் ஒரு மெய்க்காப்பாளரைப் பணியமர்த்தும்போது அவள் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. வான்-சூ தனது குடும்பத்தைப் பற்றி நிறைய கற்றுக்கொள்கிறார்

இதையும் படிங்க Upcoming OTT: கருடன் முதல் மகராஜா வரையிலான அதிரடி சூப்பர் திரைப்படம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :