Friday OTT: இன்றைய சூப்பர படங்களை OTT யில் பார்த்து மகிழுங்க

Updated on 27-Dec-2024

Friday OTT: டிசம்பர் 27 ஆன இன்று பல திரைப்படங்கள் OTT யில் பார்த்து இந்த வீக் எண்டை பார்த்து மகிழலாம் மேலும் இந்த திரைப்படங்கள் உங்களுக்கு பிடித்த Netflix, Amazon Prime Video மற்றும் பல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் பார்த்து மகிழலாம் அதாவது வெள்ளிகிழமை (டிசம்பர் 27) இன்று புதிய திரைப்படங்களை பார்த்து மகிழலாம் இன்று இந்த லிஸ்ட்டில் என்ன என்ன படங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

சொர்கவாசல் (Netflix)

சொர்கவாசல் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், R.J பாலாஜி மற்றும் செல்வராகவன் நடித்த சிறை-நாடகம், ஒரு ஊழல் அமைப்பில் சிறைபிடிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சுற்றி, சுதந்திரத்திற்கான பாதையில் பயணிக்கும் கதையைச் சுற்றி வருகிறது.மேலும் இந்த படத்தை தமிழில் பார்க்கலாம்.

Bhool Bhulaiyaa 3 (Netflix)

பூல் புலையா 3 ஹிந்தியில் இந்த வார OTT யில் பார்க்கலாம் மேலும் நியூ இயர் இது உங்களுக்கு ஒரு வர பிரசாதமாக அமையும், கார்த்திக் ஆரியனின் மிக பெரிய படமாக இருக்கும் மேலும் அனீஸ் பாஸ்மி இயக்கிய, திகில்-நகைச்சுவை திரைப்படம் வித்யா பாலனின் பூல் புலையா பிரபஞ்சத்திற்கு திரும்புவதைக் குறித்தது. பிபி3 டிரிப்டி டிம்ரி, வித்யா பாலன் மற்றும் ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Singham Again (Amazon Prime Video)

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த சிங்கம் அகைன் திரைப்படம் இன்று OTT Prime Video யில் பார்க்கலாம், இப்போது, ​​இந்த வெள்ளிக்கிழமை முதல் படம் இலவசமாக ஸ்ட்ரீம் செய்ய வாய்ப்புள்ளது. இதை தவிர இந்த படத்தில் அஜய் தேவ்கன், கரீனா கபூர் கான், தீபிகா படுகோன், அர்ஜுன் கபூர், அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

Doctors (Jiocinema)

டாக்டர் இது ஒரு மருத்துவம் சார்ந்த வெப் சீரிஸ் ஆகும் மேலும் இதில் ஷரத் கேல்கர் மற்றும் ஹர்லீன் சேத்தி ஆகியோர் முன்னணியில் நடித்துள்ளனர், மருத்துவர்களின் உயர் அழுத்த உலகத்தை எடுத்துக்காட்டுகிறது மேலும் இந்த திரைப்படம் இன்று ஜியோ சினிமாவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

RRR: Behind & Beyond

இது RRR ராஜாமவுளி யின் டக்குமேண்டரி ஆகும், RRR: Behind and Beyond இதை இன்று Netflix 27, 2024 ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது, இதில் அப்படத்தின் நாட்டு நாட்டு ஆட்டத்தை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது மேலும் இதில் பல சுவாரஸ்யத்துடன் இன்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:2024 இந்த ஆண்டு அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பங்கமாய் ப்ளாப் ஆன திரைப்படங்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :