Diwali 2024: தீபாவளி OTT மற்றும் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் சரவெடி படம்

Diwali 2024: தீபாவளி OTT மற்றும் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் சரவெடி படம்

Diwali 2024: பல திரைப்படங்கள் தியேட்டர் மற்றும் OTTக்காக வரிசையில் இருக்கிறது மேலும் மக்கள் தீபாவளிக்கு காலையில் எழுந்து குளித்துவிட்டு தீபாவளிக்கு புதிய படங்களை பார்க்க நண்ம்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புதிய படங்கள் பார்த்து மகிழ செல்வார்கள் அந்த வகையில் இந்த வாரம் OTT மற்றும் தியேட்டரில் ரிலீஸ் ஆக இருக்கும் பல படங்களின் list பற்றி பார்க்கலாம் வாங்க.

Diwali தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்

அமரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர உள்ள அமரன் திரைப்படம் தீபாவளி சிறப்பு ரில்ஸ் படமாகும் மேலும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது இதை தவிர இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார் மேலும் இப்படம் இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படத்தை இது அக்டோபர் 31 2024 ரிலீஸ் ஆகிறது இந்த தீபாவளிக்கு உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்க

பிரதர்

ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர் ராம். ராஜேஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் பூமிகா, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.இது இது அக்டோபர் 31 2024 ரிலீஸ் ஆகிறது

ப்ளடி பெக்கர்

வரிசையாக டாடா, ஸ்டார் லிப்ட் போன்ற பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த கவின்யின் அடுத்த படமாக கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் உருவாகியுள்ளது, மேலும் இப்படத்தை சிவலபாலன் இயக்குனராகவும், உதவி இயக்குனராக நெல்சன் திலீப்குமார் சேர்ந்து இயக்கியுள்ளனர் மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும்.

Bhool Bhulaiyaa 3:

இந்தியில் வெளியாகவுள்ள அனீஸ் பஸ்மி இயக்கியுள்ள பூல் பூலைய்யா 3 இப்படத்தில் கார்த்தி ஆர்யன் நடித்துள்ளார் இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூல் செய்தது. இதனால் பூல் பூலைய்யா படத்தின் மூன்றாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழு நம்புகின்றது.மேலும் இந்த திரைப்படம் நவம்பர் 1 ரிலீஸ் ஆகிறது.

Singham Again:

அஜய் தேவ் இதில் முக்கிய ரோலில் Bajirao Singham என்ற பெயரில் சிங்கம் அகைன் திரைப்படத்தில் நடிக்கிறார் மேலும் இந்த படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார், மேலும் இப்படத்தை கரீனா கப்பூர் கான்,ரன்வீர் சிங், அக்சாய் குமார்,தீபிகா படுகோன், டைகர் ஸ்ரோப் மற்றும் பலர் நடித்துள்ளனர் மேலும் இந்த திரைப்படம் தீபளிக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.

பகீரா

பகீரா நேரடி கன்னடப் படம் ஆகும். இப்படத்தினை டி.ஆர். சூரி இயக்கியுள்ளார். மேலும் இப்டத்தில் இப்படத்தில் ஸ்ரீ முரளி, பிரகாஷ் ராஜ், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது

லக்கி பாஸ்கர்

லக்கி பாஸ்கர் இந்த திரைப்படத்தை வாத்தி படத்தினை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்துல்கர் மேலும் இதில் சல்மான் மற்றும் மீனாட்சி சௌத்ரி நடிப்பில் உருவாகியுள்ள படம் லக்கி பாஸ்கர்.இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை. இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ஏற்கனவே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பைக் கூட்டிய நிலையில், படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இதும் தீபாவளி அக்டோபர் 31 2024 ரிலிஸ் ஆக இருக்கிறது மேலும் இந்த படம் தெலுங்கு,மலையாளம், ஹிந்தி, மற்றும் கன்னடா மெயில் பார்க்கலாம்.

Diwali 2024 OTT Releases:

லப்பர் பந்து (Lubber Pandhu)
Release Date: 31 October On Disney+ Hotstar

அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் மேலும் சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து ஆவர் லப்பர் பந்து ஒரு கிரிகெட் மயப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும் மேலும் இந்த திரைப்படத்தை க்டோபர் 31 தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பார்க்கலாம்.

அஞ்சாமை

இயக்குனர் SP.சுப்புராமன் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சாமை திரைப்படத்தில் வித்தார்த், வானிபோஜன் மற்றும் ரஹ்மான் போன்ற பலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் NEET exam காரணத்தால் டாக்டர் கனவு காணும் இளைஞர்களின் பாதிப்பை பற்றி எடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திரைப்படம் Aha தமிழ் அக்டோபர் 29,2024 யில் பார்க்கலாம்.

கிஷ்கிந்தா காண்டம்

நவம்பர் 1, 2024 முதல் Disney+ ஹாட்ஸ்டாரில் கிடைக்கும், கிஷ்கிந்தா காண்டம் ஆசிஃப் அலி, அபர்ணா பாலமுரளி மற்றும் விஜயராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு மர்மமான கிராமத்தில் அமைக்கப்பட்ட கதை, குரங்குகள் வாழும் கிராமத்தில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணரும்போது, ​​புதுமணத் தம்பதிகள் மற்றும் வன அதிகாரிகளைச் சுற்றி சுழல்கிறது.

இதையும் படிங்க:OTT Movie: தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் தியேட்டரை துவம்சம் சரவெடி படம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo