Action Thriller Movie:-மகாராஜா போன்ற ஆக்ஷன் திரில்லர் Netflixயில் சூப்பர் படங்கள்

Action Thriller Movie:-மகாராஜா போன்ற ஆக்ஷன் திரில்லர் Netflixயில் சூப்பர் படங்கள்

Action Thriller சமிபத்தில் விஜய் சேதுபதியின் 50வது யின் சூப்பர் ஹிட் திரைப்படமாகும் மேலும் மகாராஜா சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது இது இப்பொழுது Netflix யிலும் துவம்சம் செய்து வருகிறது, மேலும் இது Nithilan Saminathan இயக்கத்தில் வெளியானது இந்த படத்திற்க்கு ஈடு கொடுக்கும் வகையில் டாப் ஏக்சன் லேட்டஸ்ட் திரில்லர் திரைப்படங்களின் லிஸ்ட்களை பார்க்கலாம் வாங்க.

மகாராஜா :

விஜய் சேதுபதியின் 50-வது படமாக வெளியான மகாராஜா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படமாக அமைந்துள்ளது. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்த படத்தில் அபிராமி, அனுராக் காஷ்யப், மம்தா மோகந்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் Netflix யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

கல்கி 2898 ஏடி (Kalki 2898 AD)

கல்கி 2898 ஏடி மிக பெரிய சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ளது மேலும் இப்படம் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகியது மேலும் இப்படம் மிக பெரிய எக்சன் திரைப்படங்களில் ஒன்றாகும் மேலும் இது மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார் இது Netflix யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது இது 27 ஜூன் 2024 வெளிவந்தது.

ஆடுஜீவிதம்

பிளெஸ்ஸி இயக்கத்தில் சர்வைவல் டிராமாவாக உருவான ஆடுஜீவிதம் படத்தில் பிருத்விராஜ், அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் பிருத்விராஜின் அசாத்திய நடிப்பு பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படமு இந்த ஆண்டு அதிக வசூல் செய்த மலையாள படங்களில் ஒன்றாக மாறியது. மேலும் இப்படம் தற்பொழுது Netflix யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது மேலும் இது 28 மார்ச் 2024 ரிலிசாகியது

தங்கலான்

சுதந்திர தினத்தை முன்னிட்டு அதாவது ஆகஸ்ட் 15 தேதி தங்கலான் திரைப்படம் தியேட்டரில் ரிலிசாகியது மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார, இதை தவிர படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தினை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரெடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தை தற்பொழுது Netflix OTT தளங்களில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:விஜய் சேதுபதியின் மகாராஜா சீனாவில் மிக பெரிய வசூல் சாதனையில் சூப்பர் கலக்கல்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo