WhatsApp ஸ்கேமிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இந்த 5 தப்ப மட்டும் பண்ணவே பண்ணாதிங்க
WhatsApp உலகின் மிகவும் பாப்புலர் மெசேஜிங் ஆப்யில் ஒன்று ஆகும்
வாட்ஸ்அப் மூலம் சைபர் ஸ்கேமர்ஸ் தினமும் புதுப்புது வழிகளில் மக்களை சிக்க வைக்கின்றனர்
வாட்ஸ்அப் மோசடிகளைத் தவிர்ப்பதற்கான இந்த 5 முக்கிய விஷயங்களை
WhatsApp உலகின் மிகவும் பாப்புலர் மெசேஜிங் ஆப்யில் ஒன்று ஆகும். மேலும் இது பில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் மக்களை ஏமாற்றும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என்றாலும், சைபர் ஹேக்கர் நிச்சயமாக அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வாட்ஸ்அப் மூலம் சைபர் ஸ்கேமர்ஸ் தினமும் புதுப்புது வழிகளில் மக்களை சிக்க வைக்கின்றனர். வாட்ஸ்அப் மோசடிகளைத் தவிர்ப்பதற்கான இந்த 5 முக்கிய விஷயங்களை என்ன என்பதை பார்க்கலாம்.
தெரியாதWhatsApp நம்பரிலிருந்து ஜாக்கிரதையாக இருங்கள்
தெரியாத நம்பரிலிருந்து இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்தால், உடனடியாக ரிப்ளை செய்யாதிர்கள். முதலில் நம்பரை சரிபார்த்து, உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உங்களுடன் உண்மையிலேயே பேச விரும்புகிறார் என்பதை உணருங்கள், அதன் பிறகுதான் சேட்டை ஆரம்பம் செய்ய வேண்டும்.
WhatsApp பிஷிங் அட்டேக் :சைபர் தாக்குதல்
பொதுவாக பேங்க் டெலிவரி சேவைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் என்ற பெயரில் மக்களுக்கு மெசேஜ்களை அனுப்பி அவர்களை பயமுறுத்த முயற்சிக்கின்றனர். மேலும் இந்த வெப் லின்க்களை மக்களுடன் ஷேர் செய்கிறார்கள் இது ஃபிஷிங் தாக்குதல் முறையாக இருப்பதால், இதுபோன்ற மேசெஜிளிருந்து கவனமாக இருங்கள்.
WhatsApp லிங்கை க்ளிக் செய்யுமுன் யோசிக்கவும்.:
வாட்ஸ்அப்பில் வரும் எந்த மெசேஜுடனும் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். நீங்கள் நம்பும் ஒருவர் லிங்கை ஷேர் செய்திருந்தால் அதைப் பார்க்கலாம், ஆனால் தெரியாத நம்பரிலிருந்து வரும் மெசேஜை கிளிக் செய்ய வேண்டாம். இந்த லிங்களின் உதவியுடன், மேல்வேர் அல்லது வைரஸ்கள் போனில் டவுன்லோட் செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க Redmi Note 13 5G சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சம் விலை பற்றி பார்க்கலாம் வாங்க
உங்களின் தனிப்பட்ட தகவலை ஷேர் செய்ய வேண்டாம்:
பேங்க் அக்கவுன்ட் நம்பர் இன்டர்நெட் பேங்கிங் பாஸ்வர்ட் கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற உங்களின் தனிப்பட்ட தகவல்களை எவருடனும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம்.
அதிகம் சம்பளிக்கலம் என்ற விளம்பரம்:
நல்ல விஷயங்கள் தாமதமாக கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறைந்த நேரத்தில் அதிகம் சம்பாதிக்க குறுக்குவழி இல்லை, மாறாக அது ஒரு ஏமாற்று வேலை. சைபர் மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப்பில் மக்களுக்கு மெசேஜ் செய்து, முதலீடு செய்த பிறகு அவர்களின் பணம் மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாகும் என்று கூறுகின்றனர். இது தவிர, லாட்டரிகள், சலுகைகள் போன்றவற்றிலிருந்து விலகி இருங்கள்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile