WhatsApp யில் அதன் போர்ட்போலியோ வரும் நாட்களில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளது, இப்பொழுது பயனர்களுக்கு மற்றொரு நன்மை மெசேஜிங் பிளாட்பாரம் கொண்டு வந்துள்ளது. WhatsApp யில் இப்பொழுது எந்த ஒரு தனி ஆப் இல்லாமல் வாட்ஸ்அப்பில் டாக்யுமென்ட் எளிதாக ஸ்கேன் செய்ய முடியும். நாம் எப்பொழுதும் டாக்யுமெண்டை ஸ்கேன் செய்ய தனி ஆப் தேவைப்படும் இனி அதுபோன்ற தனி ஆப் தேவை இல்லை WhatsApp யின் சேட் பகுதியிலே கிடைக்கும்.
வாட்ஸ்அப் பயனர்கள் டாக்யுமேன்ட்களை ஸ்கேன் செய்ய எந்த மூன்றாம் தரப்பு ஆப்பை சார்ந்திருக்க வேண்டியதில்லை. வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் இந்த சுதந்திரத்தை அளிக்கிறது. ஆப்ஸ் கேமரா மூலம் நீங்கள் டாக்யுமென்ட் ஸ்கேன் செய்ய முடியும். இந்த ஸ்கேன் செய்யப்பட்ட டாக்யுமென்ட் தொடர்புப் லிஸ்ட்டில் உள்ள எந்தத் தொடர்புடனும் நீங்கள் பகிரலாம். இவை அனைத்தும் ஆப்யிலே கிடைத்துவிடும். முன்னதாக, ஒரு டாக்யுமென்ட் ஸ்கேன் செய்ய, பயனர் வெளியே சென்று மூன்றாம் தரப்பு ஆப் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் அது ஒரு பில் சேமிக்கப்பட்டு, ஆப்பிளிருந்து திரும்பி ஷேர் செய்யப்படும். ஆனால் இப்போது இந்த தொந்தரவு முடிந்துவிட்டது.
இதையும் படிங்க WhatsApp யின் இனி போலி போட்டோவை காட்டி யாரும் ஏமாத்த முடியாது அதிரடி அம்சம்