Christmas 2024: WhatsApp யில் வாழ்த்துக்கள், ஸ்டேட்டஸ் Quates எப்படி டவுன்லோட் செய்வதுஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்மஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. இது இயேசு கிறிஸ்து அவதரித்த தினமாகும் இந்த தினத்தை உலகெங்கிலும் கிருஸ்துவர் கொண்டாடும் மிக பெரிய பண்டிகையாகும் இதை கிறிஸ்துவர் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பாரிமாரி கொள்வார்கள். உலகத்தை இருளில் இருந்து மீட்டு, அவர்களின் வாழ்வில் புதிய ஒளியை வழங்க இயேசு கிறிஸ்து இரவில் அவதரித்ததாக கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது.எனவே அது இன்று வரை இரவு சண்டா (Santa) வந்து தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் கிப்ட் கொடுக்கும் என இன்று வரை குழந்தைகளிடம் நாம் சொல்வதை பார்த்திருப்போம்
அதே போல டிசம்பர் 2024 டிசம்பர் 25 அன்று தங்களின் அன்பானவர்களுக்கு வாழ்த்து மற்றும் WhatsApp ஸ்டேட்டஸ்,குவாட்ஸ் எப்படியெல்லாம் அனுப்பலாம் என்பதை பார்க்கலாம் வாங்க
தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் என்பது ஜீசஸை வழிபடும் கொண்டாட்டம். சர்ச்சில் மக்கள் வழிபடுவதோடு.. ப்ளம் கேக் செய்து கொண்டாடுவது, இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, மக்களுக்கு உதவி செய்வது வீடுகளை அலங்கரிப்பது , கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தமிழ் ஆங்கிலத்தில் பகிர்வது என்று கொண்டாடுவது வழக்கம். அதேபோல் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டு கொண்டாடுவது, வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்கரிப்பார்கள்.
Christmas 2024 வாழ்த்துக்கள்
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளில், அவரது அருள் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு அன்பையும், மன்னிப்பையும், புதிய தொடக்கத்தையும் அளிக்கிறது. இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
கிறிஸ்துவின் போதனைகள் நம் வாழ்வில் ஒளியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
கிறிஸ்துவின் அருள் நம்மை என்றும் காப்பாற்றட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
கிறிஸ்துமஸ் மரத்தின் அழகைப் போல உங்கள் வாழ்க்கை அழகாகட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
கிறிஸ்து பிறந்த இந்த புனித நாளில் உங்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
Whatsapp யில் உங்கள் அன்பவர்களுக்கு வாழ்த்து.(Christmas Quotes)
அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினம் இன்று நாமும் அன்பை விதைப்போம் அனைவருக்கும் இனிய கிறிஸ்துவ தின நல் வாழ்த்துக்கள்!
துன்பங்கள் களைந்துவிட்டு துயரங்கள் தகர்த்துவிட விடியலென வந்துவிட்டார் விண்ணுலக தேவனவர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
கவலைகள் மறந்து இன்பம் புகுந்து நண்பர்கள் மற்றும் உறவினரோடு இயேசு பிறந்த நாளை மகிழ்ச்சியாய் கொண்டாட என் இதயம் கனிந்த கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.
இந்த திருநாளில் உங்கள் வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
WhatsApp Christmas status எப்படி டவுன்லோட் செய்வது
வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
கிறிஸ்மஸ் செக்சனை கண்டறியவும்: கிறிஸ்மஸ் டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் கிடைக்கும்.
போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.