Happy Mattu Pongal:உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாட்டு பொங்கல் அன்பான வாழ்த்து கூறி மகிழுங்க
Happy Mattu Pongal::உழவனின் நண்பன் என சொல்லப்படும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த ஜனவரி 15 திருநாளை மாட்டு பொங்கலாக கொண்டாடப்படுகிறது, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கும், காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு மாட்டுப்பொங்கல் சிறப்பிக்கப்படுகிறது. அந்தவகையில் ஜனவரி 14 அன்று சூரியனுக்கு சூரிய பொங்கல் என கொண்டாடப்படுகிறது, அதாவது உழவுக்கு உறுதுணையாக இருந்து, உலகத்துக்கே விடியலை வழங்கிடும் கதிரவனை போற்றும் விதமாக இந்த சூரிய பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இப்பொழுது இன்று மூன்றாவது நாளாக ஜனவரி 15 உழவுக்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கு, காளைக்கும் நன்றி செலுத்தும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் வீட்டில் மாடு வைத்திருப்பவர்கள் மாட்டு பொங்கலை கொண்டாடுவது வழக்கம், மேலும் பசு வைத்திருப்போர், அதனை சுத்தம் செய்து, பொங்கல் வைத்து வழிபாட்டு, அலங்கரித்து மாட்டுப்பொங்கல் கொண்டாடலாம்இந்த நல் நாளில் உங்கள் அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்லி மகிழுங்க இதனுடன் வித, விதமான WhatsApp ஸ்டேட்டஸ் போன்றவற்றை எப்படி எல்லாம் வைக்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.
பொங்கல் பண்டிகை இந்த நான்கு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது
- போகி பொங்கல் (ஜனவரி 13): இது மழைக் கடவுளான இந்திரனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தீமை மற்றும் எதிர்மறையின் முடிவைக் குறிக்கவும் புதிய விஷயங்களை வரவேற்கவும் மக்கள் பழைய அனைத்தையும் நெருப்பில் எரிக்கிறார்கள்.
- சூரியப் பொங்கல் (ஜனவரி 14): சூரிய ஒளி மற்றும் விவசாய செழிப்புக்கான நன்றியை வெளிப்படுத்தும் சூரிய பகவானுக்கு பிரசாதமாக பால் மற்றும் வெல்லத்துடன் காய்ச்சிய பாரம்பரிய பொங்கல் உணவை குடும்பங்கள் தயாரிக்கும் முக்கிய நாள் இது.
- மாட்டுப் பொங்கல் (ஜனவரி 15): விவசாயத்தின் முதுகெலும்பாக விளங்கும் கால்நடைகளுக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பசுக்கள் மலர்களாலும் மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, பொங்கல் வைத்து மரியாதை செலுத்தப்படுகிறது.
- காணும் பொங்கல் (ஜனவரி 16): சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யும் குடும்பம் ஒன்றுகூடும் நாள். அதில் எஞ்சியிருக்கும் பொங்கலை மஞ்சள் இலையில் பிரசாதமாக வைப்பது அடங்கும்.
Happy Mattu Pongal (மாட்டு பொங்கல் டாப் 5 சிறப்பு வாழ்த்துக்கள்.
- உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள், இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்!
- வீரத்தமிழர்களுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்!
- உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லி இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்
- “மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு நிறைந்த மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துக்கள்!”
- “இந்த அறுவடைக் காலத்தில் உங்கள் கனவுகள் நனவாகட்டும்! இனிய பொங்கல் 2025!”
WhatsApp மாட்டு பொங்கல் status எப்படி டவுன்லோட் செய்து வைப்பது
- வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
- பொங்கல் செக்சனை கண்டறியவும்: பொங்கல் டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் கிடைக்கும்.
- போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
- மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இதையும் படிங்க:Happy Pongal 2025: தித்திக்கும் பொங்கலை WhatsApp யில் GIF,ஸ்டிக்கர் இப்படி வித விதமாக அனுப்பி அசத்துங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile