digit zero1 awards

Happy Mattu Pongal:உங்கள் அன்பானவர்களுக்கு ஸ்டிக்கர்,GIF வாழ்த்து வித விதமாக அனுப்பி அசத்துங்க

Happy Mattu Pongal:உங்கள் அன்பானவர்களுக்கு ஸ்டிக்கர்,GIF வாழ்த்து வித விதமாக அனுப்பி அசத்துங்க

Happy Mattu Pongal: பொங்கல் என்றாலே தமிழ் நாட்டில் ஸ்பெசல் தான், அதும் இந்த ஜனவரி 15 திருநாளை மாட்டு பொங்கலாக கொண்டாடப்படுகிறது, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கும், காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு மாட்டுப்பொங்கல் சிறப்பிக்கப்படுகிறது. அந்தவகையில் ஜனவரி 14 அன்று சூரியனுக்கு சூரிய பொங்கல் என கொண்டாடப்படுகிறது, அதாவது உழவுக்கு உறுதுணையாக இருந்து, உலகத்துக்கே விடியலை வழங்கிடும் கதிரவனை போற்றும் விதமாக இந்த சூரிய பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இப்பொழுது இன்று மூன்றாவது நாளாக ஜனவரி 15 உழவுக்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கு, காளைக்கும் நன்றி செலுத்தும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் வீட்டில் மாடு வைத்திருப்பவர்கள் மாட்டு பொங்கலை கொண்டாடுவது வழக்கம், மேலும் பசு வைத்திருப்போர், அதனை சுத்தம் செய்து, பொங்கல் வைத்து வழிபாட்டு, அலங்கரித்து மாட்டுப்பொங்கல் கொண்டாடலாம் மேலும் இந்த நாளில் தான் வீர சாகச விளையாட்டு ஜல்லிக்கட்டு நடக்கும் இந்த நல் நாளில் உங்கள் அன்பானவர்களுக்கு வாழ்த்து, WhatsApp ஸ்டிக்கர்,GIF போன்றவை அனுப்பி அசத்துங்க.

நான்கு நாள் பொங்கல் கொண்டாட்டம்

  1. போகி பொங்கல் (ஜனவரி 13): இது மழைக் கடவுளான இந்திரனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தீமை மற்றும் எதிர்மறையின் முடிவைக் குறிக்கவும் புதிய விஷயங்களை வரவேற்கவும் மக்கள் பழைய அனைத்தையும் நெருப்பில் எரிக்கிறார்கள்.
  2. சூரியப் பொங்கல் (ஜனவரி 14): சூரிய ஒளி மற்றும் விவசாய செழிப்புக்கான நன்றியை வெளிப்படுத்தும் சூரிய பகவானுக்கு பிரசாதமாக பால் மற்றும் வெல்லத்துடன் காய்ச்சிய பாரம்பரிய பொங்கல் உணவை குடும்பங்கள் தயாரிக்கும் முக்கிய நாள் இது.
  3. மாட்டுப் பொங்கல் (ஜனவரி 15): விவசாயத்தின் முதுகெலும்பாக விளங்கும் கால்நடைகளுக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பசுக்கள் மலர்களாலும் மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, பொங்கல் வைத்து மரியாதை செலுத்தப்படுகிறது.
  4. காணும் பொங்கல் (ஜனவரி 16): சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யும் குடும்பம் ஒன்றுகூடும் நாள். அதில் எஞ்சியிருக்கும் பொங்கலை மஞ்சள் இலையில் பிரசாதமாக வைப்பது அடங்கும்.

WhatsApp யில் பொங்கல் ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது

  1. கூகுள் ப்ளே ஸ்டோரை திறந்து “Mattu Pongal stickers for WhatsApp” என்று தேடவும்.
  2. விருப்பங்களில் இருந்து உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர் பேக்கைத் தேர்ந்தெடுத்து அதை WhatsApp யில் சேர்க்கவும்.
  3. டவுன்லோட் செய்த பிறகு, வாட்ஸ்அப்பில் உள்ள My Stickers டேபிள் ஸ்டிக்கர்களைக் கண்டறியவும்.
  4. பேக்கிலிருந்து ஒரு ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுத்து, ‘+’ (சேர்) பட்டனை தட்டவும். ‘வாட்ஸ்அப்பில் சேர்’ என்பதைத் தட்டுவதன் மூலம் உறுதிப்படுத்தவும்.
  5. இப்போது, ​​உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் ஸ்டிக்கர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.

பொங்கல் GIF whatsApp யில் எப்படி அனுப்புவது?

  1. வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் GIF ஐப் ஷேர் செய்ய விரும்பும் சேட்டுக்கு செல்லவும்.
  2. மெசேஜ் பாக்ஸில் உள்ள ஸ்மைலி ஐகானைத் தட்டவும்.
  3. GIF விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சர்ச் ஐகானைக் கிளிக் செய்து “Happy Pongal ” என டைப் செய்யவும்.
  5. இப்பொழுது நீங்கள் அனுப்ப விரும்பும் அன்பானவர்களுக்கு வாழ்த்து அனுப்பலாம்.

இதையும் படிங்க: Happy Mattu Pongal:உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாட்டு பொங்கல் அன்பான வாழ்த்து கூறி மகிழுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo