WhatsApp யில் வருகிறது மஜாகோ அம்சம் இனி யாருக்கு கால் செய்ய மறக்க மாட்டிங்க

Updated on 30-Dec-2024

கோவிட்-19 முதல் வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரம் மிகவும் பிரபலமாகிவிட்டது. மீட்டிங்க்கு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை, மாறாக மீட்டிங்கை வெர்ஜுவல் நடத்தலாம் என்பதை இது காட்டுகிறது. WhatsApp என்பது உலகின் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்பாகும், இது கிட்டத்தட்ட அனைவரின் போனிலும் காணப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் Event என்ற அம்சம் உள்ளது, இது காலிங் ஷேட்யுள் எளிதாக்குகிறது. இருப்பினும், இந்த அம்சம் க்ரூப்களின் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் வாட்ஸ்அப்பில் நேரடியாக கால்களை ஷேட்யுள் செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்த மூன்றாம் தரப்பு ஆப்யின் மூலமாகவும் வெர்ஜுவல் மீட்டிங்கை அமைக்க வேண்டியதில்லை. வாட்ஸ்அப்பில் காலிங் எவ்வாறு ஷேட்யுள் செய்யலாம் என்பதை இங்கு படிப்படியாகச் பார்க்கலாம்.

WhatsApp யின் கால் ஷேட்யுள் எப்படி செய்வது?

  • முதலில் உங்கள் போனில் வாட்ஸ்அப்பை திறக்க வேண்டும்.
  • அதன் பிறகு நீங்கள் காளிங்கை ஷேட்யுள் செய்ய விரும்பும் க்ரூபிற்க்கு செல்ல வேண்டும்.
  • இப்போது நீங்கள் மெசேஜ் லிஸ்ட்டில் கீழ் இடதுபுறத்தில் உள்ள + ஐகானைத் தட்ட வேண்டும்.
  • இப்போது போட்டோ , கேமரா, லோகேசன் உள்ளிட்ட பல விருப்பங்கள் இங்கே தெரியும், அதில் நீங்கள் “Event” ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது நீங்கள் நிகழ்வை உருவாக்கி, அதன் பெயரை உள்ளிட்டு நேரத்தை அமைக்க வேண்டும்.
  • லிங்கின் மூலம் மீட்டிங்கைத் தொடங்க விரும்பினால், நிலைமாற்றத்தை இயக்க வேண்டும், அதில் வீடியோ அல்லது ஆடியோ காலிங்கை தேர்ந்தெடுக்கலாம். கடைசியாக நீங்கள் அனுப்பு பட்டனை தட்ட வேண்டும்.
  • சில காரணங்களுக்காக நீங்கள் மீட்டிங் கேன்ஸில் செய்ய வேண்டியிருந்தால், சேட்டின் அதே மீட்டிங் ஷேட்யுள் event எடிட் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் அதை கேன்ஸில் செய்யலாம்.

இதையும் படிங்க: EPFO யின் புதிய அப்டேட் உங்கள் PF பணத்தை ATMயிலிருந்து எடுத்து கொள்ளலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :