ஆப்பிளுக்கு போட்டியாக அறிமுகமாகிறது கேலக்ஸி பட்ஸ் 2 இயர்பட்ஸ்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் 2 இயர்பட்ஸ் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது
புரோ வெர்ஷன் இந்த வருடம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
சாம்சங் கேலக்ஸி Fold 4, கேலக்ஸி Z Flip 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ஆகியவை மட்டுமே அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் 2 இயர்பட்ஸ் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் புரோ வெர்ஷன் இந்த வருடம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் அந்நிறுவனத்தின் வருடாந்திர ஈவண்ட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்திய தகவல் படி இந்த இயர்பட்ஸ் அந்த ஈவண்டில் வெளியிடப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி பட்ஸ் 2 மாடலில் புளூடூத் 5.2, மூன்று மைக்ரோபோன்கள், நாய்ஸ் கேன்சலேசன் வசதி, டச் சென்சார், வாய்ஸ் பிக் அப் யூனிட் என பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தன. இதேபோல் விரைவில் அறிமுகமாக உள்ள கேலக்ஸி பட்ஸ் புரோ 2 மாடலும் என்னற்ற அம்சங்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
அந்த ஈவண்டில் சாம்சங் கேலக்ஸி Fold 4, கேலக்ஸி Z Flip 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ஆகியவை மட்டுமே அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். ஆப்பிளின் ஏர்பாட்ஸ் புரோ வெர்ஷனுக்கு போட்டியாக சாம்சங் நிறுவனம் இந்த கேலக்ஸி பட்ஸ் புரோ 2 மாடலை களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. கேலக்ஸி பட்ஸ் புரோ 2 மாடலின் சிறப்பம்சங்கள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile