ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மூன்று ஜியோஃபை சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 249, ரூ. 299 மற்றும் ரூ. 349 ஆகும். புது சலுகைகளுடன் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கான வேலிடிட்டி மற்றும் 50GB வரையிலான அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.
இத்துடன் இத்துடன் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் டாங்கிலை வாடிக்கையாளர்கள் பயன்படித்தி முடித்தப் பின் திரும்ப வழங்க வேண்டும். இந்த சலுகை வியாபாரங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஜியோஃபை போஸ்ட்பெயிட் சலுகைகள் 18 மாதங்களுக்கு லாக்-இன் பிரீயட் முறையில் வழங்கப்படுகிறது.
புதிய ஜியோஃபை ரூ. 249 சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 30GB டேட்டா வழங்குகிறது. இதனை பயனர்கள் 18 மாதங்களுக்கு வாங்கிக் கொள்ள முடியும். இதனுடன் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோஃபை ரூ. 299 சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 40GB டேட்டா வழங்குகிறது.
ரூ. 349 ஜியோஃபை சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 50GB டேட்டா வழங்குகிறது. மற்ற இரு சலுகைகளை போன்றே இதனுடன் பயன்படுத்தியதும் திரும்ப வழங்கும் வகையில் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதாவது பயனர்கள் ஒரு முறை இந்த சலுகையை தேர்வு செய்தால் 18 மாதங்களுக்கு அதில் இருந்து வெளியேற முடியாது. ஜியோ வலைதள விவரங்களின் படி புதிய ஜியோஃபை புது போஸ்ட்பெயிட் சலுகைகள், டேட்டா பலன்களை மட்டுமே வழங்குகின்றன. இதில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. முதல் முறை இந்த சலுகைகளை தேர்வு செய்யும் போது ரூ. 200 செலுத்த வேண்டும்