ரெட்மி இந்தியா தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் ரெட்மி வாட்ச் 2 லைட்டின் அறிமுகத்தை இந்தியாவில் உறுதி செய்துள்ளது. Redmi Note 11 Pro மற்றும் Redmi Note 11 Pro + 5G உடன் Redmi Watch 2 Lite மார்ச் 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். Redmi Watch 2 Lite ஆனது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வாட்ச் ஏ-ஜிபிஎஸ், GLONASS, GALILEO, BDS ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த வாட்சில் 100-க்கும் மேர்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கபட்டுள்ளன. 10 நாட்கள் பேட்டரி லைஃப் வழங்கப்படும் இந்த வாட்ச், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டென்ஸையும் க்கொண்டுள்ளது.
1.55 இன்ச் TFT டச் ஸ்கிரீன் கொண்ட இந்த வாட்சில் 360×320 ரெஷலியூஷன் தரப்பட்டுள்ளது. இதன் பிபிஐ டென்சிட்டி 311-ஆக வழங்கப்பட்டுள்ளது. இந்த வாட்சில் பிரிக்க முடியாத Li-Ion 262 mAh பேட்டரி, ஆக்ஸல்ரோமீட்டர், ஹார்ட் ரேட், கைரோ, காம்பெஸ், SpO2 சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
இணைப்பிற்காக புளூடூத் v5 உள்ளது. இந்த வாட்ச் 100 வாட்ச் முகங்களுடன் வரும் மற்றும் 100 ஒர்க்அவுட் முறைகளையும் கொண்டிருக்கும். Redmi Watch 2 Lite உடன் 17 தொழில்முறை முறைகள் உள்ளன. ரெட்மி வாட்ச் 2 லைட் வாட்டர் ரெசிஸ்டண்ட்டுக்கான 5ATM மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
இதன் விலை ரூ.6000-க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.