முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக பின்டிரஸ்ட் இருந்து வருகிறது. புகைப்படங்களை பகிரும் சமூக வலைதளமான இதில் தற்போது இ-காமர்ஸ் சேவையும் இடம்பெறபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், பயனர்கள் இனி நேரடியாக பின்டிரஸ்ட் செயலியில் இருந்தே ஷாப்பிங் செய்து பொருட்களை வாங்க முடியும் என தெரிவித்துள்ளது.
தற்போது இந்த சேவை பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு பின் உலகம் முழுவதும் கொண்டு வரப்படவுள்ளது.
பொருட்களை விற்பனை செய்பவர்களும் எளிதாக பொருட்களின் பட்டியலை உருவாக்கி, விலை மாற்றங்களையும் செய்ய முடியும் என கூறியுள்ளது.
இந்த புதிய சேவையில் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய வகையில் ஷாப்பிங் பக்கங்களை தேர்வு செய்யலாம். மேலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிப்பாளர்கள், பிராண்டுகள் பரிந்துரைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது