Oppo Enco M32 நெக்பேண்ட் இயர்போன் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த சாதனம் நீண்ட பேட்டரி ஆயுள், வேகமான சார்ஜிங் ஆதரவு, தூசி-தண்ணீர் எதிர்ப்பிற்கான IP55 மதிப்பீடு மற்றும் சிறந்த ஒலி அனுபவத்துடன் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயர்போன்களின் சிறப்பம்சங்கள் என்ன, Oppo Enco M32 Neckband இயர்போன்களின் விலை எவ்வளவு, இதைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவோம்.
அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் புதிய இயர் விங் டிசைன், பாஸ்ட் சார்ஜிங், 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 20 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. இத்துடன் டூயல் டிவைஸ், ஃபாஸ்ட் ஸ்விட்சிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
– 10 எம்.எம். டைனமிக் டிரைவர்கள், தனித்துவம் மிக்க சவுண்ட் கேவிட்டி டிசைன்
– ப்ளூடூத் 5.0, ஏ.ஏ.சி. கோட்
– டூயல் டிவைஸ் பேரிங் மற்றும் ஃபாஸ்ட் ஸ்விட்சிங்
– ஹால் மேக்னெடிக் ஸ்விட்ச்
– 33 கிராம் எடை
– ஐ.பி. 55 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி
– 220 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
புதிய ஒப்போ என்கோ எம்32 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 10 ஆம் தேதி துவங்குகிறது. ஒப்போ என்கோ எம்32 விலை ரூ. 1799 ஆகும். ஜனவரி 10 முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறும் விற்பனையில் இந்த இயர்போனை அமேசான் மற்றும் ஒப்போ ஸ்டோர் தளங்களில் வாங்குவோருக்கு ரூ. 300 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இதன் விலை சில நாட்களுக்கு ரூ. 1,499 ஆக இருக்கும்.