Oppo இந்தியாவில் அதிகபட்ச 24 மணி நேர பேட்டரி நீடிக்க கூடிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

Updated on 08-Sep-2021
HIGHLIGHTS

புதிய மற்றும் மலிவு விலை இயர்பட்ஸ் OPPO என்கோ பட்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

OPPO Enco Buds உடன் 24 மணிநேர பேட்டரி பேக்கப் கோரப்பட்டுள்ளது

முதல் முறையாக வயர்லெஸ் இயர்பட்களை வாங்க விரும்புவோருக்கு OPPO என்கோ பட்ஸ் சரியானது.

ஒப்போ இந்தியா தனது புதிய மற்றும் மலிவு விலை இயர்பட்ஸ் OPPO என்கோ பட்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. OPPO Enco Buds உடன் 24 மணிநேர பேட்டரி பேக்கப் கோரப்பட்டுள்ளது. இது ஏஏசி கோடெக் மற்றும் நோய்ஸ் கேன்ஸிலேசன்  போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. முதல் முறையாக வயர்லெஸ் இயர்பட்களை வாங்க விரும்புவோருக்கு OPPO என்கோ பட்ஸ் சரியானது.

புதிய இயர்பட்ஸ் 8 எம்.எம். டைனமிக் டிரைவர், ப்ளூடூத் 5.2, லோ-லேடென்சி டிரான்ஸ்மிஷன் அம்சங்களை கொண்டிருக்கிறது.

இந்த இயர்பட்ஸ் கால் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. ஒப்போ என்கோ பட்ஸ் மாடலில் ஐ.பி.54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த இயர்பட் கேஸ் 400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

மியூசிக், பாடல்களை மாற்றுவது, வால்யூம் மாற்றுவது போன்ற அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. கேமிங் ப்ரியர்களுக்கு சூப்பர்-லோ 80 எம்.எஸ். லேடென்சி கேம் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை இயக்க பயனர்கள் இயர்பட் மீது மூன்று முறை க்ளிக் செய்ய வேண்டும். 

ஒப்போ என்கோ பட்ஸ் விலை தகவல்.

ஒப்போ என்கோ பட்ஸ் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை ரூ. 1,799 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :