OnePlus Watch Cobalt லிமிட்டட் எடிசன் அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.
OnePlus வாட்சின் புதிய சிறப்பு பதிப்பை வெளியிடுவது
கோபால்ட் எடிஷன் விற்பனை மே 17 முதல் தொடங்கும்
ஒன்பிளஸின் இந்த க்ளோக் தங்க வண்ண பூச்சுடன் வருகிறது.
OnePlus வாட்சின் புதிய சிறப்பு பதிப்பை வெளியிடுவது குறித்து ஒன்பிளஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இப்போது, நிறுவனம் புதிய கோபால்ட் லிமிட் பதிப்பை சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன்,OnePlus Watch Cobalt லிமிட்டட் எடிசன் விலையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கோபால்ட் எடிஷன் மாடலில் சபையர் கிளாஸ் கவர், 316L ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் கோபால்ட் அலாய் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வட்ட வடிவ டையல் கோல்டு பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடன் லெதர் மற்றும் புளுரோ ரப்பர் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர ஒன்பிளஸ் வாட்ச் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் எடிஷன் தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கிறது. இதன் விலையும் கிளாசிக் எடிஷன் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
சீன சந்தையில் ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் எடிஷன் விலை RMB1599 இந்திய மதிப்பில் ரூ. 18,250 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் வாட்ச் புது வேரியண்ட் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile