Nokia Power Earbuds லைட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம்

Nokia Power Earbuds  லைட்  மாடல் இந்திய சந்தையில் அறிமுகம்
HIGHLIGHTS

நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம்

Nokia 600 எம்ஏஹெச் போர்டபில் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.

HMD குளோபல் நிறுவனம் நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஐபிஎக்ஸ்7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ப்ளூடூத் 5 வசதிகளை கொண்டுள்ளது.

Nokia Power Earbuds லைட் சிறப்பம்சங்கள்

– 6எம்எம் கிராபின் டிரைவர்களுடன் உயர் ரக ஆடியோ 
– ப்ளூடூத் 5 வசதி
– வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் டச் கண்ட்ரோல் 
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– 50 எம்ஏஹெச் பேட்டரி – ஒரு இயர்பட்
– 600 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட சார்ஜிஙஅ கேஸ்
– யுஎஸ்பி டைப் சி சார்ஜிங்

இத்துடன் 600 எம்ஏஹெச் போர்டபில் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. இது இயர்பட்களை கூடுதலாக 6 முறை சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் மொத்தத்தில் 35 மணி நேர பிளேபேக் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் ஸ்னோ மற்றும் சார்கோல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்குகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo