NoiseFit Core பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்.
நாய்ஸ், இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது.
புதிய ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ்பிட் கோர் என அழைக்கப்படுகிறது
இதில் உள்ள 285 எம்.ஏ.ஹெச். பேட்டரி 7 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது.
எலக்ட்ரோனிக் அக்சஸரீக்கள் பிராண்டான நாய்ஸ், இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ்பிட் கோர் என அழைக்கப்படுகிறது. இதில் 1.28 இன்ச் டிஸ்ப்ளே, சின்க் அலாய் பாடி, 24×7 இதய துடிப்பு சென்சார், 13 ஸ்போர்ட் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன.
இதில் உள்ள 285 எம்.ஏ.ஹெச். பேட்டரி 7 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது. ஸ்டாண்ட்பை மோடில் இந்த வாட்ச் 30 நாட்களுக்கான பேக்கப் வழங்கும். நாய்ஸ்பிட் செயலி மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்துகொள்ளும் வசதியை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டிருக்கிறது.
நாய்ஸ்பிட் கோர் மாடல் சின்க் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, இதய துடிப்பு, உறக்கம் உள்ளிட்டவைகளை டிராக் செய்கிறது.
நாய்ஸ்பிட் கோர் ஸ்மார்ட்வாட்ச்- சார்கோல் பிளாக் மற்றும் சில்வர் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,999 எனும் துவக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile