லெனோவாவுக்குச் சொந்தமான மோட்டோரோலா தனது ஸ்மார்ட்வாட்ச் மோட்டோ வாட்ச் 100 ஐ இறுதியாக அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோ வாட்ச் 100 இன் வடிவமைப்பு வட்டமானது மற்றும் இரத்த ஆக்ஸிஜனைக் கண்காணிக்கும் ஒரு SpO2 சென்சார் உள்ளது. இந்த கடிகாரத்தில் மோட்டோ ஓஎஸ் உள்ளது. மோட்டோ வாட்ச் 100 இன் பேட்டரி தொடர்பாக 14 நாள் பேக்கப்[ கோரப்பட்டுள்ளது.
இத்துடன் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், ஜி.பி.எஸ்., பெய்டூ, ப்ளூடூத் 5 எல்.இ. போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 45.8 கிராம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
இதனை இ-பை-நௌ எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மோட்டோ வாட்ச் ஓ.எஸ். கொண்டிருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோ வாட்ச் 100 மாடலில் 1.3 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 42 எம்.எம். அலுமினியம் கேசிங், இதய துடிப்பு மற்றும் எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங், 26 ஸ்போர்ட் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
மோட்டோ வாட்ச் 100 மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,449 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த வாட்ச் மோட்டோவாட்ச் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.