Mivi அறிமுகப்படுத்தியது அசத்தலான இயர்பட்ஸ் F40 நீண்ட பேட்டரி லைப் கிடைக்கும்.
Mivi, இன்று புதிய மற்றும் "Purely Made in India" வயர்லெஸ் duopods Mivi F40 ஐ அறிமுகப்படுத்தியது
நீண்ட பேட்டரி ஆயுளுடன் நுகர்வோருக்கு நிலையான இணைப்பை வழங்கும் நோக்கத்துடன் DuoPodகள் வடிவமைக்கப்பட்டுள்ளன
DuoPods இன் வழக்கமான விலை ரூபாய் 1199 மற்றும் 5 அழகான வண்ணங்களில் கிடைக்கும் -
இந்தியாவின் முன்னணி வீட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான Mivi, இன்று புதிய மற்றும் "Purely Made in India" வயர்லெஸ் duopods Mivi F40 ஐ அறிமுகப்படுத்தியது. நீண்ட பேட்டரி ஆயுளுடன் நுகர்வோருக்கு நிலையான இணைப்பை வழங்கும் நோக்கத்துடன் DuoPodகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது Flipkart மற்றும் Mivi இணையதளத்தில் அறிமுக நாளில் ரூ.999 சிறப்பு விலையில் கிடைக்கும். DuoPods இன் வழக்கமான விலை ரூபாய் 1199 மற்றும் 5 அழகான வண்ணங்களில் கிடைக்கும் – வெள்ளை, கருப்பு, சாம்பல், பச்சை மற்றும் நீலம்.
F60 மாடலில் இருந்ததைப் போல் இதிலும் 13mm டிரைவர்ஸ், புளுடூத் 5.1, வாய்ஸ் கேன்சலேசன், அலெக்ஸா, சிரி மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட்டுடன் வருகிறது. இதுதவிர இயர்பட்ஸை தொட்டாலே மொபைல் கால்களை ஏற்கவோ மற்றும் தவிர்க்கவோ முடியும்.
வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதியும் இதில் உள்ளது. MIVI Duopods F40 இயர்பட்ஸ், வெள்ளை, கருப்பு, பச்சை, கிரே மற்றும் புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.1,199 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதும், இது பிளிப்கார்ட் மற்றும் MIVI தளத்தில் ரு.999க்கு விற்பனைக்கு கிடைக்கிறது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 மணிநேரம் தாங்கும் பேட்டரி பேக் அப்புடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது. 70 சதவீத வால்யூமை வைத்திருந்தால் மட்டுமே 50 மணிநேரம் இடைவிடாது கேட்க முடியுமாம். 500mAh பேட்டரியுடன் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. பேட்டரி கேஸில் உள்ள LED டிஸ்பிளே பேட்டரியில் சார்ஜ் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்காணிக்க உதவுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile