Xiaomi Mi 11 அல்ட்ரா மற்றும் எம்ஐ 11 எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி நிறுவனம் தனது டாப் எண்ட் QLED ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய QLED 4K டிவி 75 இன்ச் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே, குவாண்டம் டாட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது
– 75 இன்ச் 3840×2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
– குவாட்கோர் மீடியாடெக் MT9611 (ஏ55) பிராசஸர்
– மாலி G52 MP2 GPU
– 2 ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 10
– வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0, 1 x HDMI 2.1, 2 x HDMI 2.0, 2 x யுஎஸ்பி
– 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈத்தர்நெட்
– 30 வாட் ( 2 x 15 வாட்) 6 ஸ்பீக்கர் சிஸ்டம்
– டால்பி ஆடியோ, DTS-HD
இத்துடன் டால்பி விஷன், HDR10+, மெல்லிய பெசல்கள், விவிட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், HDMI 2.1 போர்ட், ஆட்டோ லோ லேடென்சி மோட், 30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம், டால்பி ஆடியோ மற்றும் DTS-HD போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
சியோமி எம்ஐ QLED டிவி 75 விலை ரூ. 1,19,999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி துவங்குகிறது.