Xiaomi ஸ்மார்ட்போன் மற்றும் அணியக்கூடிய பிரிவில் வலுவான பிடியை உருவாக்கியுள்ளது மற்றும் நிறுவனத்தின் Mi பிராண்ட் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் Xiaomi தனது ஸ்மார்ட் பேண்ட் சீரிஸை புதுப்பிக்கிறது, மேலும் இந்த ஆண்டும் நிறுவனம் இதேபோன்ற ஒன்றைச் செய்யப் போகிறது. இப்போது சில காலமாக, வரவிருக்கும் Mi பேண்ட் 7 பற்றிய விவாதங்களுக்கான சந்தை சூடாக இருந்தது, இப்போது நிறுவனம் வெளியீட்டு தேதியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தகவல் அந்நிறுவனத்தின் Weibo கணக்கில் இருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய அறிவிப்பின் படி சியோமி பேண்ட் 7 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்போவதாக சியோமி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர்களில், சியோமி பேண்ட் 7 மாடல் மே 24 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
டீசரின் படி புதிய அணியக்கூடிய சாதனம் அதன் முந்தைய மாடலை போன்றே காட்சி அளிக்கும் என தெரிகிறது. Mi பேண்ட் 7 மாடல் அதன் முந்தைய வெர்ஷன்களை போன்றே ஸ்டாண்டர்டு மற்றும் NFC என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.
ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை டிராக் செய்ய இந்த பேண்ட் 7 மாடலில் ஏராளமான அம்சங்கள் மற்றும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்படலாம். இதில் SpO2, இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் பல்வேறு உடல் நலன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை சியோமி பேண்ட் 7 மாடலில் 1.62 இன்ச் AMOLED 192×490 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இது முந்தைய சியோமி பேண்ட் 6 மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை விட 25 சதவீதம் பெரியது ஆகும்.