தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மலிவான 4 ஜி ஸ்மார்ட்போனை ஒருபுறம் வழங்கப் போகிறது. அதே நேரத்தில், நிறுவனம் இப்போது லேப்டாப் பிரிவிலும் நுழையத் தயாராகி வருகிறது. ஜியோபுக் லேப்டாப் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். லேப்டாப் இந்திய தரநிலைகள் (BIS ) இணையதளத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு சான்றிதழ் இணையதளம். இந்த லேப்டாப்பின் சில அம்சங்களும் இங்கு காணப்பட்டன. ஜியோவின் வரவிருக்கும் லேப்டாப் இந்த சான்றிதழ் இணையதளத்தில் மூன்று வகைகளில் காணப்படுகிறது. உள் மாதிரியைத் தவிர, அதன் மற்ற அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
பொதுவாகவே BIS தளத்தை தாண்டிய எந்தவொரு தயாரிப்பும் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் லேப்டாப் ஆன ஜியோபுக், அதற்கு ஒரு விதிவிலக்காக இருக்காது என்று நம்பலாம்.
முந்தைய அறிக்கைகள் JioBook ஆனது 4G LTE கனெக்ஷன், ஸ்னாப்டிராகன் ப்ராசஸர், 4GB LPDDR4x ரேம் மற்றும் 64GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம் என்று கூறுகின்றன.
இருப்பினும் ஜியோபுக்கின் சரியான வெளியீட்டு தேதி வெளியாகவில்லை, அவ்வளவு ஏன்? லான்ச் டைம்லைன் கூட தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது அது "இந்த ஆண்டுக்குள்" என்று தெரிய வந்துள்ளது.
ஜியோபுக் லேப்டாப்பை பிஐஎஸ் சான்றிதழ் இணையதளத்தில் கண்டதாக கூறி, அதைப்பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் முகுல் சர்மா (@stufflistings) என்பதால், கிடைக்கப்பெற்ற தகவலை நாம் முழுவதுமாக நம்ப வேண்டாம் என்றாலும் கூட ஓரளவு நம்பலாம்.
BIS தளத்தில் NB1118QMW, NB1148QMW, மற்றும் NB1112MM – என்கிற 3 வகையிலான ஜியோபுக் லேப்டாப் காணப்பட்டுள்ளது. இது ரிலையன்ஸ் ஜியோவின் முதல் லேப்டாப் மொத்தம் மூன்று வெவ்வேறு வகைகளில் வரலாம் என்பதை அறிவுறுத்துகிறது.
முன்னதாக வெளியான லீக்ஸ் தகவல்கள், வரவிருக்கும் ஜியோ லேப்டாப்பில் HD (1,366×768 பிக்சல்கள்) டிஸ்ப்ளே இடம்பெறலாம் என்று கூறுகிறது. மேலும் இது ஸ்னாப்டிராகன் எக்ஸ் 12 4 ஜி மோடம் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 665 SoC மூலம் இயக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது 4GB LPDDR4x RAM மற்றும் 64GB வரை eMMC இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டு இருக்கலாம். கனெக்டிவிட்டிகளை பொறுத்தவரை, இது மினி எச்டிஎம்ஐ கனெக்டர், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் ஆகியவைகளை பேக் செய்யலாம்.
மேலும் இது த்ரீ ஆக்சிஸ் அக்ஸலரோமீட்டர் மற்றும் குவால்காம் ஆடியோ சிப் உடன் வரலாம் என்றும் கூறப்படுகிறது.நிச்சயமாக, ஜியோபுக்கில் ப்ரீ-இன்ஸ்டால்ட்டு செய்யப்பட்ட ஜியோ ஸ்டோர், ஜியோமீட் மற்றும் ஜியோபேஜஸ் போன்ற ஆப்கள் இடம்பெறும். மேலும், இந்த லேப்டாப்பில் ப்ரீ-லோடட் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் டீம்ஸ், மைக்ரோசாப்ட் எட்ஜ் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் போன்ற மைக்ரோசாப்ட் ஆப்களையும் ஒருவர் எதிர்நோக்கலாம்.