JIO வாடிக்கையாளர்கள் இனி டிவியிலிருந்து வீடியோ காலிங் செய்ய முடியும்.

Jio Fiber யூசர் இப்போது தங்கள் ஸ்மார்ட் டிவிகளில் இருந்து வீடியோ கால்களை செய்யலாம்
புதிய ஜியோ ஃபைபர் இந்த அம்சத்தை Camera on Mobile என பெயரிட்டுள்ளது
இந்த JioJoin ஆப் மூலம் கிடைக்கும்.
Jio Fiber யூசர் இப்போது தங்கள் ஸ்மார்ட் டிவிகளில் இருந்து வீடியோ கால்களை செய்யலாம். ஜியோ ஃபைபர் இந்த அம்சத்தை Camera on Mobile என பெயரிட்டுள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜியோ ஃபைபர் யூசர்களுக்கு டிவியில் இருந்து வீடியோ அழைப்புக்கு தனி கேமரா தேவையில்லை. ஜியோ ஃபைபரின் இந்த JioJoin ஆப் மூலம் கிடைக்கும். JioJoin முன்பு JioCall என்று அறியப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள். JioJoin ஆப் Android, iOS மற்றும் Android டிவைஸ்களில் கிடைக்கிறது.
JioJoin ஆப் உதவியுடன், யூசர்கள் தங்கள் போனின் கேமராவை வீடியோ காலுக்கான உள்ளீட்டு சாதனமாகப் பயன்படுத்த முடியும். ஜியோ ஃபைபர் மூலம், ஜியோஃபைபர்வாய்ஸ் என்ற பெயரில் கால் சேவை கிடைக்கிறது என்பதை கூறுகிறார். ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ ஜோஇன் ஆப் இருந்து உங்கள் மொபைல் மூலம் லேண்ட்லைன் எண்களிலிருந்து வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும். ஜியோ கடந்த சில மாதங்களாக ‘Camera on Mobile' பியூச்சர் சோதித்து வந்தது, இப்போது அது ஆண்ட்ராய்டு மற்றும் iOS டிவைஸ்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் டிவியில் இருந்து வீடியோ காலிங் செய்வது எப்படி?
மொபைல் கேமராவில் இருந்து டிவியில் வீடியோ கால் தொடங்க, முதலில் நீங்கள் மொபைல் எண்ணுடன் JioJoin ஆப் உள்நுழைய வேண்டும். இதற்குப் பிறகு, ஆப் இல் காணப்படும் ‘Camera on Mobile' பியூச்சர் இயக்க வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் டிவியில் வீடியோ கால் செய்ய முடியும். ஜியோ ஃபைபர் சிறந்த காலுக்கு 5GHz Wi-Fi பேண்டைப் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.
சமீபத்திய நாட்களில் சியோமி மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் டிவியில் இருந்து அழைப்பதற்காக வெப்கேம்கள் அறிமுகப்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் ஜியோ மொபைல் கேமராவை டிவியில் வெப்கேமரா கப் பயன்படுத்தும் வசதியை வழங்கியுள்ளது, இது ஒரு பெரிய விஷயம். இத்தகைய சூழ்நிலையில், ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் தனியாக வெப்கேமரா வாங்க வேண்டியதில்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile