Itel புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்யும்.

Updated on 02-Mar-2021
HIGHLIGHTS

ஐடெல் ஆண்ட்ராய்டு டிவிக்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

இந்த ஆண்டும் புது டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஐடெல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஐடெல் நிறுனம் இந்திய சந்தையில் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டும் ஐடெல் ஆண்ட்ராய்டு டிவிக்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 
 
சமீபத்திய ஆய்வுகளில் நம்பத்தகுந்த பிராண்டுகள் பட்டியலில் ரூ 5 முதல் 7 ஆயிரம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் ஐடெல் இடம்பெற்று இருக்கிறது. டிவிக்களை பொருத்தவரை புது ஐடெல் மாடல்களில் பிரேம்லெஸ் பிரீமியம் ஐடி டிசைன், அல்ட்ரா-பிரைட் டிஸ்ப்ளே, தரமான ஆடியோ அனுபவம் மற்றும் டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கலாம்.

அந்த வரிசையில் இந்த ஆண்டும் புது டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஐடெல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஆண்ட்ராய்டு டிவிக்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

புதிய டிவி மாடல்கள் 32 இன்ச், 43 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் அதிக அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இந்தியாவில் இதன் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

ஐடெல் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் எம்ஐ, ரியல்மி மற்றும் டிசிஎல் பிராண்டு டிவிக்களுக்கு போட்டியாக அமைகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :