iFFalcon K72 55 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிவியை டிசிஎல் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. iFFalcon K72 வீடியோ காலிங்க்காக வெளிப்புற கேமராவை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 iFFalcon K72 55 டிவி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது தவிர, இது டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மற்றும் நிறுவனத்தின் AIPQ இன்ஜின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது நிகழ்நேர வீடியோ மற்றும் டிஸ்பிளேகளை மேம்படுத்துகிறது. பல HDMI மற்றும் USB போர்ட்கள் டிவியுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் மோஷன் எஸ்டிமேஷன் மற்றும் மோஷன் காம்பன்ஸன்ஷன் (MEMC) தொழில்நுட்பமும் உள்ளது, இது மென்மையான காட்சிகளை வழங்க உதவுகிறது. இந்த புதிய 55 இன்ச் IFFalcon ஸ்மார்ட் டிவி ஆனது HDR10 உட்பட பல HDR பார்மெட்களையும் ஆதரிக்கிறது.
IFFalcon K72 55-inch 4K ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.51,999 ஆகும். இது Flipkart வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது.இந்த லேட்டஸ்ட் IFFalcon TV சிங்கிள் பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி ஒரு வருட உத்தரவாதத்துடன் வாங்க கிடைக்கிறது.
சலுகைகளை பொறுத்தவரை, பிளிப்கார்ட் தளம், iFFalcon K72 55-inch 4K TV-ஐ வெறும் ரூ.1,778 முதல் தொடங்கும் EMI விருப்பங்களின் கீழ் விற்பனை செய்கிறது. கூடுதலாக சில நிபந்தனைகளுடன் ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும் என்று பல வங்கிகளின் சலுகைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. .
மேலும் IFFalcon K72 55-inch 4K ஸ்மார்ட் டிவி ஆனது இன்பில்ட் கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் Chromecast உடன் வருகிறது., ஆண்ட்ராய்டு டிவி 11 மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் டிவி டால்பி விஷன், டால்பி அட்மாஸ், ரியல்டைம் ஆடியோ மற்றும் விஷுவல் ஆப்டிமைசேஷனுக்கான நிறுவனத்தின் AIPQ இன்ஜின், பல HDMI மற்றும் USB போர்ட்கள், டூயல் பேண்ட் வைஃபை ஆதரவு உட்பட பல கவனிக்கத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது
ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ் கொண்டு இயங்கும் வீடியோ அழைப்புகளுக்கு எக்ஸ்டெர்னல் கேமராவை கொண்டுள்ளது HDR10 உட்பட பல HDR பார்மெட்களுக்கான ஆதரவு MEMC உடன் வருகிறது, இது மென்மையான காட்சிகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த டிவியில் கேமர்கள் lag-free மற்றும் blur-free விஷூவல்களை அனுபவிக்கலாம் என்று டிசிஎல் கூறுகிறது. யூடியூப், நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உட்பட பல ப்ரீ லோலட் ஆப்ஸ் தேவையான ஆப்களை இன்-பில்ட் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்யலாம்.
இது AIxIoT என்று அழைக்கப்படும் amalgamation of artificial intelligence and internet of things உடன் வருகிறது. அதாவது, இது பயனர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மற்ற ஸ்மார்ட் சாதனங்களை டிவி வழியாக கட்டுப்படுத்த அனுமதிக்கும்.உடன் டிவியில் பல்வேறு அம்சங்களைக் கட்டுப்படுத்த ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் 2.0 அம்சமும் அணுக கிடைக்கும்.
மூன்று HDMI 2.1 போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஒரு ஈதர்நெட் போர்ட், SPDIF போர்ட் மற்றும் ப்ளூடூத் ஆதரவுடூயல் பேண்ட் Wi-Fi உடன் வருகிறது, அதாவது, 2.4GHz மற்றும் 5GHz பேண்டுகளுக்கான ஆதரவை வழங்கும்
அளவீட்டில் இந்த ஸ்மார்ட் டிவி 1,234x724x86 மிமீ உள்ளது மற்றும் ஸ்டாண்ட் இல்லாமல் இது 11 கிலோ எடையை கொண்டிருக்கும். டிவி உடன் தொகுக்கப்பட்ட ரிமோட் ஆனது நெட்பிளிக்ஸ், ஜீ 5, அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் கீஸ்களுடன் வருகிறது.