வாட்ஸ்அப் செயலி உலகின் முன்னணி ஷார்ட் மெசேஜ் செயலியாக இருந்து வருகிறது. இந்த செயலியில் உங்களின் ப்ரோபைலை இணைய முகவரி வடிவில் சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அம்சத்தை செயல்படுத்துவதற்கான பட்டன் செட்டிங்ஸ் டேபில், உங்களின் ப்ரோபைல் புகைப்படத்தின் அருகில் இடம்பெற்று இருக்கும். தற்போது வாட்ஸ்அப் செயலியில் உங்கள் ப்ரோபைலை QR கோட் வடிவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா 2.22.9.8 வெர்ஷனில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதே தகவலில் புதிதாக ஷேர் ப்ரோபைல் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு உங்களின் ப்ரோபைலை லிண்க் வடிவில் உருவாக்க முடியும்.