Whatsapp ப்ரோபைலுக்கு QR கோட் எப்படி உருவாக்குவது?

Whatsapp ப்ரோபைலுக்கு QR கோட்  எப்படி உருவாக்குவது?
HIGHLIGHTS

வாட்ஸ்அப் செயலி உலகின் முன்னணி ஷார்ட் மெசேஜ் செயலியாக இருந்து வருகிறது.

உங்களின் ப்ரோபைலை இணைய முகவரி வடிவில் சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்குவதற்கான

இதை எவ்வாறு செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

வாட்ஸ்அப் செயலி உலகின் முன்னணி ஷார்ட் மெசேஜ்  செயலியாக இருந்து வருகிறது. இந்த செயலியில் உங்களின் ப்ரோபைலை இணைய முகவரி வடிவில் சோசியல்  மீடியாக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்த அம்சத்தை செயல்படுத்துவதற்கான பட்டன் செட்டிங்ஸ் டேபில், உங்களின் ப்ரோபைல் புகைப்படத்தின் அருகில் இடம்பெற்று இருக்கும். தற்போது வாட்ஸ்அப் செயலியில் உங்கள் ப்ரோபைலை QR கோட் வடிவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம். 

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா 2.22.9.8 வெர்ஷனில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதே தகவலில் புதிதாக ஷேர் ப்ரோபைல் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு உங்களின் ப்ரோபைலை லிண்க் வடிவில் உருவாக்க முடியும். 

  • – முதலில் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.
  • – அடுத்து திரையின் மேல் வலபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
  • – இந்த மெனுவில் இருந்து செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • – இனி QR கோட் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஐகான் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட் பெயருக்கு அருகில் இடம்பெற்று இருக்கும். 
  • – மேல்புறத்தில் உள்ள ஷேர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் QR கோட் உங்களின் கேலரியில் சேவ் ஆகி விடும். 

ஐபோனில் செய்வது எப்படி?

  • – ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.
  • – திரையின் கீழ்புறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • – இனி வாட்ஸ்அப் அக்கவுண்ட் பெயருக்கு அருகில் உள்ள QR கோட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • – மேல்புறத்தில் உள்ள ஷேர் ஐகானை கிளிக் செய்து QR கோடினை உங்களது கேலரியில் சேவ் செய்து கொள்ளலாம்.
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo