கூகுள் மேப்பில் ரயில் லைவ் ஸ்டேட்டஸ் எப்படி தெரிந்து கொள்வது.?
உலகின் பெரும்பாலான பயனர்கள் Google Maps சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கூகுள் நிறுவனம் தனது Maps சேவையில் மூன்று அம்சங்களை 2019ஆம் ஆண்டில் சேர்த்தது.கூகுள் நிறுவனம் தனது Maps சேவையில் மூன்று அம்சங்களை 2019ஆம் ஆண்டில் சேர்த்தது.
இந்த அம்சத்தை பயன்படுத்த உங்களிடம் கூகுள் கணக்கு; அதாவது 'Gmail' இருக்க வேண்டும்.
உலகின் பெரும்பாலான பயனர்கள் Google Maps சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் பலத் தரப்பட்ட வேலைகளை எளிதாக செய்ய உதவுகிறது. தெரியாத இடங்களை கூட துல்லியமாகக் கணித்து, பயனர்களுக்கு போகும் வழியை காட்டுகிறது.
கூகுள் நிறுவனம் தனது Maps சேவையில் மூன்று அம்சங்களை 2019ஆம் ஆண்டில் சேர்த்தது. இந்த அம்சங்கள் பயனர்கள் நீண்ட தூரத்திற்கான நிகழ்நேர ரயில்களின் நிலையைச் சரிபார்க்கவும், 10 நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தில், பேருந்து பயண நேரங்களைச் சரிபார்க்கவும், வாடகை வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து குறித்த தகவல்களை காண்பிக்கவும் உதவுகிறது.
முதலில், இந்த அம்சத்தை பயன்படுத்த உங்களிடம் கூகுள் கணக்கு; அதாவது 'Gmail' இருக்க வேண்டும். இந்த கணக்கு இருந்தால் தான், நீங்கள் இந்த சேவையை பயன்படுத்த அனுமதிக்கப்படுவீர்கள். இப்போது, எவ்வாறு ரயிலின் நிகழ்நேர நிலையை அறிவது என்று பார்க்கலாம்.
நிகழ்நேரத்தில் கிடைக்கும் ரயில் நிலை குறித்த தகவல் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. ஏனெனில், இந்த செயலி ரயிலின் வருகை நேரம், அட்டவணை, தாமத நிலை மற்றும் பல அறிவிப்புகளை வழங்குகிறது. பயணிகளுக்கு இந்த செயலி வழங்கும் சேவைகள் மிகவும் அவசியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதே சேவையை அளிக்கும் பல மூன்றாம் தரப்பு செயலிகள் இருந்தாலும், பெரும்பாலானோர் பயன்படுத்தும் Android ஸ்மார்ட்போன்களை வாங்கும் போதே இந்த Google Maps செயலி நிறுவப்பட்டிருக்கும்.
Live Train Status-ஐ துல்லியமாக வழங்க Google நிறுவனம் 'Where is my train' தளத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்குகிறது. இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். நிகழ்நேரத்தில் ரயிலின் நிலையை அறியவது எப்படி என்று உங்களுக்காக வழிமுறைகளைத் தொகுத்துள்ளோம். இதனை பின்பற்றி உங்கள் பயணத்தை சிறப்பானதாக மாற்றுங்கள்.
- முதலில் 'Google Maps' செயலியைத் திறக்க வேண்டும்
- இதை செய்வதற்கு முன் 'Location' அல்லது 'GPS' ஆக்டிவாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்
- தொடர்ந்து செயலிக்குள் உள்நுழைந்ததும் 'Search here' எனும் தேடு பொறியை கிளிக் செய்யவும்
- அதில், நீங்கள் செல்லும் ரயில் நிலையத்தின் பெயரை டைப் செய்யவும்
- அப்போது, பட்டியலில் தோன்றும் உங்கள் இலக்கு ரயில் நிலையத்தை கிளிக் செய்யவும்
- அப்போது, அந்த ரயில் நிலையத்தை நோக்கி செல்லும் ரயில்கள் குறித்த விவரங்கள் காண்பிக்கப்படும்
- அதில், நீங்கள் செல்லும் ரயிலை கிளிக் செய்யவும்
- உடனடியாக, உங்கள் ரயில் கடந்து செல்லும் தொடர்வண்டி நிலையங்கள் குறித்த தகவல்கள் திரையில் தோன்றும்
- நீங்கள் இறங்க வேண்டிய நிலையத்தைத் தேர்வு செய்யவும் train live status.
- திரையில், நீங்கள் பயணிக்கும் ரயில் எந்த நேரத்தில் எந்த நிலையத்தில் இருந்து புறப்பட்டது, இலக்கு நிலையத்தை எப்போது சென்றடையும் போன்ற தகவல்கள் காட்டப்படும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile