WhatsApp Android பயனர்களுக்காக ஒரு புதிய அம்சத்தில் வேலை செய்கிறது, இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்களின் தனியுரிமை மேலும் அதிகரிக்கப் போகிறது. உண்மையில், WABetaInfo யின் அறிக்கையைப் பார்த்தால், வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சுதந்திரத்தை வழங்கப் போகிறது, அதில் பயனர்கள் தங்கள் சேட்களை அணுக ரகசிய கோடை உருவாக்கலாம்.
இதன் பிறகு இந்த கோடின் மூலம் சேட் அக்சஸ் கிடைக்கும், இருப்பினும், இப்போது இந்த அம்சம் இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது, இது பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். வாட்ஸ்அப்பின் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் இன்னும் கிடைக்கவில்லை.
இந்த ரகசியக் கோடை மறைக்கப்பட்ட எந்த சேட்டுக்கும் பாஸ்வர்டக செயல்படப் போகிறது. இந்த அறிக்கையைப் பார்த்தால், அதன் படி, பயனர்கள் இந்த கோட் மூலம் மட்டுமே இந்த சேட்களை பார்க்க முடியும்.
இது தவிர, கம்பேனியன் டிவைசில் இந்த கோட் மூலம் செட்களை மறைக்க முடியும் என்பதும், இந்த கோடின் உதவியுடன் பார்க்க முடியும் என்பதும் வெளிச்சத்திற்கு வருகிறது. இந்தக் கோடை உருவாக்க பயனர்கள் சொல் அல்லது ஈமோஜியையும் பயன்படுத்தலாம்.
இப்பொழுது பயனர்களிடம் மற்றொரு ஆப்சன் Archive Chats இருக்கிறது., அதன் உதவியுடன், பயனர்கள் வழக்கமான சேட் உடன் எந்த Archive சேட்டையும் பார்க்க மாட்டார்கள்.
இதையும் படிங்க: Bank Statement எடுத்தபாவத்துக்கு அக்கவுன்டிலிருந்து 11 லட்சம் பறிபோனது
டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின் பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் வாட்ஸ்அப் சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.