realme NARZO 70 Turbo 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது MediaTek Dimensity 7300 எனர்ஜி பிராசஸர் கொண்டுள்ளது , மேலும் இந்த புதிய NARZO போனில் 6.67 இன்ச் FHD+ டிஸ்ப்ளே இருக்கிறது இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. 5 ஆயிரம் mAh பேட்டரி பொருத்தப்பட்ட, NARZO 70 Turbo 5G ஆனது 45 வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது மேலும் இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
realme NARZO 70 Turbo 5G இது டர்போ யெல்லோ, டர்போ கிரீன் மற்றும் டர்போ பர்ப்பிள் கலர்களில் வழங்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை 6GB + 128GB மாடலின் விலை 16999ரூபாயும், 8GB + 128GB வேரியன்ட் விலை 17,999 ரூபாயாக இருக்கிறது மற்றும் அதன் 12GB + 256GB மாடலின் விலை 20,999ரூபாயாக இருக்கிறது, செப்டம்பர் 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் realme.com, Amazon.in உள்ளிட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் இதைப் பெறலாம். நிறுவனம் ரூ.2 ஆயிரம் கூப்பன் தள்ளுபடி வழங்குகிறது. அதன் பிறகு இதன் விலை கீழே கொடுக்கப்பட்ட விலையில் வாங்கலாம்.
realme NARZO 70 Turbo 5G ஆனது 6.67-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் ரேசளுசன் 2400 × 1080 பிக்சல்கள். காட்சி 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. 2 ஆயிரம் நிட்களின் உச்ச பிரகாசம் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் வசதி உள்ளது, அதாவது விரல்கள் ஈரமாக இருந்தாலும் போனின் டிஸ்ப்ளே பதிலளிக்கிறது. டிஸ்ப்ளேவில் பாண்டா கிளாஸ் பாதுகாப்பை நிறுவனம் வழங்கியுள்ளது.
realme NARZO 70 Turbo 5G யின் ப்ரோசெசர் பற்றி பேசினால், மீடியடேக் டிமான்சிட்டி 7300 Energy ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 இல் இயங்குகிறது, இது Realme UI 5 லேயர் இருக்கிறது
இதன் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால், 12GB வரையிலான ரேம் LPDDR4X RAM LPDDR4X RAM மற்றும் 256GB வரையிலான UFS 3. ஸ்டோரேஜ் வழங்குகிறது
இந்த போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் புதிய நார்ஸோ போனில் 50 எம்பி ப்ரைம் கேமரா சென்சார் உள்ளது. இதனுடன் 2 எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முன் கேமரா 16 மெகாபிக்சல். கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், 5000mAh பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இதில் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, மற்ற அம்சங்கள் பற்றி பேசினால், 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது, NARZO 70 Turbo 5G யின் இடை 185 கிராம் ஆகும் மேலும் இந்த போன் டுயல் சிம் சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க: Infinix Hot 50 5G போன் இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க