முதல் முறையாக மூன்று கேமராவுடன் Oppo Find N3 Flip அறிமுகம்

முதல் முறையாக மூன்று கேமராவுடன் Oppo Find N3 Flip அறிமுகம்
HIGHLIGHTS

Oppo இன்று இந்தியாவில் clamshell-style foldable Smartphone Oppo Find N3 Flip அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த போனில் MediaTek இன் octa-core சிப்செட் மற்றும் 12GB ரேம் பொருத்தப்பட்டுள்ளது

இது மூன்று பின்புற கேமரா செட்டிங் கொண்டுள்ளது

Oppo இன்று இந்தியாவில் clamshell-style foldable Smartphone Oppo Find N3 Flip அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனில் MediaTek இன் octa-core சிப்செட் மற்றும் 12GB ரேம் பொருத்தப்பட்டுள்ளது. இது மூன்று பின்புற கேமரா செட்டிங் கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் மூன்று நிற விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த சமீபத்திய மடிக்கக்கூடிய போன் இந்தியாவில் Samsung Galaxy Z Flip 5 மற்றும் Moto Razr 40 Ultra ஆகியவற்றுடன் போட்டியிடும். புதிய போனின் விலை, கிடைக்கும் மேலும் இதன் சிறப்பம்சம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Oppo Find N3 Flip: விலை தகவல்.

Find N3 Flip யின் 12GB + 256GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் யின் விலை 94,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இந்த போன் கிரீம் கோல்ட், மிஸ்டி பிங்க் மற்றும் ஸ்லீக் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் மற்றும் அதன் விற்பனை அக்டோபர் 22 ஆம் தேதி மாலை 6 மணி முதல் Oppo இன் ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் தொடங்கும். பரிமாற்றத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.8000 கூடுதல் தள்ளுபடியைப் பெறுவார்கள் மற்றும் ரூ.12000 வரை கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும்.

Oppo Find N3 Flip சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே

Oppo யின் இந்த போனில் 6.8-இன்ச் முழு HD+ LTPO AMOLED ஸ்க்ரினை கொண்டுள்ளது, இது 120Hz வரையிலான டைனமிக் ரெப்ராஸ் வீதத்தையும் 1600 nits ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது. அதன் 3.6-இன்ச் கவர் டிஸ்ப்ளே 900 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் AMOLED பேனலுடன் வருகிறது., ஒப்போவின் புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான கலர் OS 13.2 ஸ்கின் மூலம் இயங்குகிறது.

ப்ரோசெசர் மற்றும் ஸ்டோரேஜ்

Find N3 Flip ஆனது ARM Immortalis-G715 MC11 GPU, 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட 4nm MediaTek Dimensity 9200 சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதன் 512 ஜிபி இன்டெர்னல் சீனாவிலும் தொடங்கப்பட்டது, இது இந்தியாவில் கிடைக்காது.

கேமரா

50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 32MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டிங் உடன் இந்த போன் வருகிறது. மேலும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு இது 32MP கேமராவைக் கொண்டுள்ளது, இது உள் ஸ்க்ரீனில் வைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

Find N3 Flip ஆனது 4300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 44W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போனில் Dolby Atmos உடன் இரட்டை ஸ்பீக்கர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. போனின் இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.3, NFC, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க: OnePlus 12 யின் டிசைன் கேமரா கொண்ட Detailsleak

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo