digit zero1 awards

June 2024 upcoming போன் லிஸ்ட்டில் என்ன போன் இருக்கும் தெரியுமா

June 2024 upcoming போன் லிஸ்ட்டில் என்ன போன் இருக்கும் தெரியுமா

June 2024 upcoming போன் :2024 ஆம் ஆண்டின் முதல் பாதியின் கடைசி மாதம் அதாவது ஜூன் மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களிடமிருந்து பல ஸ்மார்ட்போன் வெளியீடுகளைக் காணலாம். இவற்றில், சியோமி, விவோ மற்றும் ஹானர் போன்ற பிராண்டுகள் தங்கள் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளன, அதே நேரத்தில் மோட்டோரோலா, ரியல்மி, ஒப்போ போன்ற பிராண்டுகளின் போன்களும் ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அடுத்த சில நாட்களில் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்பதை பற்றுங்கள்

Vivo X Fold 3 Pro

Vivo X Fold 3 Pro ஜூன் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் மடிக்கக்கூடிய போன்களில் இதுவும் ஒன்று. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் விவோவின் முதல் போல்டபில் போன் இதுவாகும். நிறுவனம் ஏற்கனவே சீனாவில் Vivo X Fold 3 Pro அறிமுகப்படுத்தியுள்ளது. போனில் 8.03 இன்ச் மெயின் டிஸ்ப்ளே உள்ளது, அதேசமயம் கவர் டிஸ்பிளேயின் அளவு 6.53 இன்ச் ஆகும். Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் மொபைலில் நிறுவப்பட்டுள்ளது. இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Xiaomi 14 Civi

Xiaomi 14 Civi இந்தியாவில் ஜூன் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஃபோன் Xiaomi Civi 4 Pro யின் ரீப்ரான்ட் வெர்சனாக கூறப்படுகிறது. போனில் 6.55 இன்ச் 1.5K டிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. ப்ரோசெச்சருக்கு இதில் Qualcomm Snapdragon 8s Gen 3 சிப்செட் உள்ளது. இதில் 50 மெகாபிக்சல் அகல கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. செல்ஃபிக்காக 32 மெகாபிக்சல் இரட்டை கேமரா செட்டிங் இந்த ஃபோன் கொண்டிருக்கும். இந்த போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4,700mAh பேட்டரியும் இருக்கும்.

Honor 200

ஹானர் 200 சீரிஸின் உலகளாவிய வெளியீடு ஜூன் 12 அன்று. இதன் வெளியீட்டு விழா பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற உள்ளது. Honor 200 மற்றும் Honor 200 Pro ஆகியவை இந்தத் சீரிஸில் அறிமுகம் செய்யப்படும் இரண்டு போன்களும் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Honor 200 Pro ஆனது Snapdragon 8s Gen 3 ப்ரோசெசறை கொண்டுள்ளது, அதேசமயம் Honor 200 ஆனது Snapdragon 7 Gen 3 ப்ரோசெசறை கொண்டுள்ளது. 200 ப்ரோ சிறந்த வயர்லெஸ் மற்றும் செல்லுலார் கனேக்சனுக்கான ஹானர் சி1+ சிப்பைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான MagicOS 8.0 யில் வேலை செய்கின்றன. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளன, மேலும் 200 Pro ஆனது 66W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

Realme GT 6

Realme GT 6 ஜூன் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது Realme GT Neo 6 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பு என்று கூறப்படுகிறது. இந்த போனில் Snapdragon 8s Gen 3 SoC இருப்பதாக கூறப்படுகிறது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 6.78-இன்ச் 1.5K டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும். இது LTPO OLED டிஸ்ப்ளேவுடன் வரப் போகிறது. போனில் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா இருக்கும். இது 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வரலாம். 5,500mAh பேட்டரியுடன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வழங்கப்படலாம்.

Oppo F27 Pro

Oppo F27 Pro ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். இது Oppo A3 Pro யின் ரீபிராண்ட் வெர்சன் என்று கூறப்படுகிறது. ஃபோன் 6.7 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வரலாம். இதில் MediaTek Dimensity 7050 சிப்செட் இருக்கும். போனில் 64MP பின்பக்க கேமரா பொருத்தப்பட்டிருக்கும். செல்ஃபிக்காக 8 மெகாபிக்சல் கேமராவை இதில் காணலாம். 5000 mAh பேட்டரியுடன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வழங்கப்படலாம்.

Moto G85

Moto G85 இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று என கூறப்படுகிறது. Snapdragon 4 Gen 3 சிப்செட்டை போனில் காணலாம். தொலைபேசியின் பின்புறத்தில் இரட்டை கேமரா செட்டிங் பொருத்தப்பட்டிருக்கும். முக்கிய கேமரா சென்சார் 50 மெகாபிக்சல்கள் என்று கூறப்படுகிறது. இந்த போன் அப்பர் மிட்ரேஞ்ச் சாதனமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க Airtel அறிமுகம் செய்தது சூப்பர் பிளான் OTT லவ்வருக்கு இது மிகவும் பிடிக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo