ITR refund அதாவது ஜூலை 31 இன்கம் டேக்ஸ் (Income Tax Return) பைல் செய்வதற்க்கான கடைசி தேதி ஆகும். இன்கம் டேக்ஸ் நிரப்ப Form 16 முக்கியமாகும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியிடுகின்றன. டேக்ஸ் அக்கவுன்ட் தாக்கல் செய்ய, வரி செலுத்துவோருக்கு பாரம் 16 மற்றும் பாரம் 26AS, வரி தகவல் அறிக்கை (TIS), வருடாந்திர தகவல் அறிக்கை (AIS), பேங்க் விவரங்கள் மற்றும் வட்டி சான்றிதழ் போன்ற பிற தேவையான ஆவணங்களும் தேவை. 2023-24 நிதியாண்டிற்கான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை ஐடிஆர்-1 முதல் ஐடிஆர்-7 வரை மொத்தம் ஏழு பார்ம்களை வெளியிட்டுள்ளது. மேலும் நீங்க ITR ஏற்கனவே பைல் செய்துள்ளிர்கள் ITR refund ஸ்டேடஸ் எப்படி செக் செய்வது என்று பார்க்கலாம்.
2024-25 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டிற்காக நான்கு கோடிக்கும் அதிகமான ITR ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால், உங்கள் பணத்தைத் திரும்பப்பெறும் நிலையை அறிய விரும்பினால், வருமான வரித் துறையானது வரி செலுத்துவோர் சில ஸ்டெப்களில் ஆன்லைனில் பணத்தைத் திரும்பப்பெறும் ஸ்டேட்டஸ் கண்டறிய அனுமதிக்கிறது அது எப்படி என்பதை பார்க்கலாம்
இதையும் படிங்க Ola Maps யில் டேட்டா திருட்டுகாரணமாக நோட்டிஸ்