WhatsApp channel யின் பெயரை எப்படி Edit செய்வது|Tech News
WhatsApp சில நாட்களுக்கு முன்பு சேனல் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
வாட்ஸ்அப்பின் சேனல்கள் அம்சம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளது
வாட்ஸ்அப் சேனலின் பெயரை எவ்வாறு எடிட் செய்வது
WhatsApp சில நாட்களுக்கு முன்பு சேனல் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. வாட்ஸ்அப்பின் சேனல்கள் அம்சம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளது. பல மீடியா நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் வாட்ஸ்அப் சேனலுடன் தொடர்புடையவர்கள். வாட்ஸ்அப் சேனலும் டெலிகிராம் சேனலைப் போன்றது. வாட்ஸ்அப் சேனல் மூலம் ஒரு வழி கம்யூனிகேசன் உள்ளது, அதாவது நீங்கள் எந்த மேசெசுக்கும் பதிலளிக்க முடியாது. பலர் வாட்ஸ்அப் சேனல்களை உருவாக்கியுள்ளனர். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். இந்த அறிக்கையில், வாட்ஸ்அப் சேனலின் பெயரை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
WhatsApp Channels என்றால் என்ன இதனால் என்ன பயன் ?
முதலில் வாட்ஸ்அப் சேனல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். இது வாட்ஸ்அப் இன் ப்ரோட்காஸ்ட் அம்சத்தின் விரிவாக்கப்பட்ட வடிவமாகும். சேனல்கள் டெக்ஸ்ட் போட்டோக்கள் வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் போல்களை அனுப்ப அட்மிங்களை அனுமதிக்கும் ஒரு வழி ப்ரோட்காஸ்ட் கருவியாகும். உங்கள் விருப்பப்படி எந்த சேனலையும் நீங்கள் போலோ செய்யலாம்.
ஒரு சர்ச் டைரெக்டரி உள்ளது, அதில் உங்கள் பொழுதுபோக்குகள், விளையாட்டு அணிகள், உள்ளூர் அதிகாரிகள் பற்றிய நோட்டிபிகேசன் பெற முடியும். வாட்ஸ்அப் சேனல் அட்மின்கள் அல்லது பிற போலோவர்களின் போன நம்பர் தெரியாது நீங்கள் எந்த சேனலைப் போலோ செய்ய விரும்புகிறீர்கள் என்பது முற்றிலும் உங்களைச் சார்ந்தது மற்றும் உங்கள் விருப்பம் தனிப்பட்டதாக இருக்கும்.
வாட்ஸ்அப் Channels யின் பெயர் எப்படி எடிட் செய்வது?
- முதலில் நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் திறக்கவும்.
- இப்போது சேனல் பெயரைக் கிளிக் செய்து தகவல் பக்கத்திற்குச் செல்லவும்.
- இப்போது சேனல் தகவலைக் கிளிக் செய்து பெயரை மாற்றவும்.
- பெயரைத் எடிட் செய்த பின், செக் மார்க்கில் கிளிக் செய்யவும்.
இதையும் படிங்க : WhatsApp Secret Code: Android பயனர்களுக்காக விரைவில் வருகிறது சூப்பர் அம்சம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile