கூகுள் பிக்சல் 8 சீரிஸ் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது இந்த சீரிஸின் கீழ் இரண்டு மாடல்கள் அடங்கும் அவை Google Pixel 8 மற்றும் Google Pixel 8 Pro ஆகும், Google Pixel 8a, இந்த சீரிஸின் மிகவும் குறைந்த விலை வெர்சன் ஆகும் இந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே, இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில விவரங்கள் புதிய அறிக்கையில் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் இந்த கூகுள் ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம் என்று பார்ப்போம்.
WinFuture யின் ஒரு ரிப்போர்ட் படி Pixel 8a அதன் முந்தைய ஜெனரேசன் Pixel 7a ஐ விட விலை அதிகமாக இருக்கலாம். பிக்சல் 8a ஸ்மார்ட்போன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதே விலை உயர்வுக்கான காரணம். தெரியாதவர்களுக்கு, கூகுள் தனது Pixel 7a ஸ்மார்ட்போனை 128GB ஸ்டோரேஜ் விருப்பத்தில் மட்டுமே வழங்குகிறது .
Pixel 8a யின் 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை EUR 569.90 (தோராயமாக ₹51,300). இதற்கிடையில், 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் EUR 630க்கு (தோராயமாக ₹56,700) வழங்கப்படலாம். அறிக்கையின்படி, கூகிள் பிக்சல் 8A நான்கு கலர் விருப்பங்களில் கிடைக்கக்கூடும்: Obsidian (Black), Porcelain (Beige), Bay (Light Blue) மற்றும் Mint (Light Green) கலர்களில் கிடைக்கும்.
வதந்தியின் படி நம்பினால் நம்பினால் Pixel 8a ஆனது Google Tensor G3 ஆக்டா-கோர் சிப்செட் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கின்றன. டிசைனை பற்றி பேசுகையில், முந்தைய லீக் படத்தின் படி, பிக்சல் 8A போன் முந்தைய ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது மிகவும் ரவுண்ட் டிசைன் உடன் வர வாய்ப்புள்ளது. பின்புறத்தில் பீம் டிசைனில் இரண்டு கேமராக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Realme இந்தியாவில் இரண்டு புதிய போனை அறிமுகம் செய்துள்ளது
இதை தவிர பவர் பட்டன் மற்றும் வோல்யும் ராக்கர்ஸ் வலது புறம் வைக்கப்படும், இது தவிர, நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற பேனலின் மையத்தில் Google லோகோவை சேர்க்கலாம். மேலும், இந்த கைபேசியில் 27W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.