Bank Statement எடுத்தபாவத்துக்கு அக்கவுன்டிலிருந்து 11 லட்சம் பறிபோனது
பெண் ஒருவர் இந்த ஆனலின் மோசடியில் சிக்கியுள்ளார்.
இந்த பெண் தனது பேங்க் ஸ்டேட்மென்ட் ஆன்லைனில் எடுத்தார்
சுமார் 11 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தார்.
நாட்டில் ஆன்லைன் Scam பரவி வருகிறது. புனேவை சேர்ந்த பெண் ஒருவர் இந்த வலையில் சிக்கியுள்ளார். இந்த பெண் தனது Bank Statement ஆன்லைனில் எடுத்தார் ஆனால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இப்படி இழக்க நேரிடும் என்று அவருக்கு எப்படி தெரியும். அந்த பெண் தனது பேங்க் அக்கவுன்ட் ச்டேமெண்டை ஆன்லைனில் பெறுவதற்காக சுமார் 11 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தார்.
அந்த பெண் தனது பேங்க்கின் வேப்சைட்டிர்க்கு சென்று பேங்க் ஸ்டேட்மென்ட் பெற முயன்றதாகவும், ஆனால் அந்த ஸ்டேட்மெண்டை பெற முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், அந்தப் பெண் ஆன்லைனில் உதவி கேட்டதாக சென்னார், அவர் ஆன்லைன் ஹெல்ப்லைன் எண்ணைக் கண்டுபிடித்து அதைத் தொடர்பு கொண்டார். அந்தப் பெண்ணின் போனுக்கு பதிலளித்தவர், ரிமோட் அக்சஸ் சாப்ட்வேரை டவுன்லோட் செய்தால் தான் உதவ முடியும் என்று கூறியதாக கூறினார்.
அந்த பெண் அவரை நம்பி ரிமோட் அக்சஸ் சாப்ட்வேரை டவுன்லோட் செய்துள்ளார். அவர் தனது பேங்க் கணக்கு விவரங்களை அந்த நபருடன் போனில் ஷேர் செய்து கொண்டார். மோசடி செய்பவர்கள் பேங்க் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பயன்படுத்தி அவரது பேங்க் ஸ்டேட்மென்ட்பெற முயன்றனர். இந்த முழு செயல்முறையிலும் அந்தப் பெண் தோராயமாக ரூ.11 லட்சத்தை இழக்க நேரிட்டது.
இதையும் படிங்க : Amazon Great Indian Festival Sale 2023: ரூ,15000க்குள் வரும் போனில் செம்ம ஆபர்
இதுபோன்ற Bank ஸ்கேம்மில் எப்படி பாதுகாப்பாக இருப்பது?
- இது போன்ற சம்பவங்கள் இன்று சர்வசாதாரணமாகி விட்டது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பாதுகாப்பாக இருக்க சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். முதலில், உங்கள் பேங்க் அக்கவுன்ட் என்று வரும்போது, மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எந்த உதவியையும் பெறாதீர்கள். அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் அல்லது பேங்க் ரிலேசன்ஷிப் மேனேஜர் மட்டும் நம்புங்கள்.
- ஹெல்ப்லைன் நம்பர்களை எப்பொழுது ஆன்லைனில் தேட வேண்டாம். யாரேனும் காலின் போது உங்கள் விவரங்களைப் ஷேர் செய்ய கேட்டால் தவறுதலாக கூட ஷேர் செய்ய கூடாது
- அந்நியரின் அறிவுறுத்தல்களின்படி எந்த ரிமோட் அக்சஸ் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். இதன் மூலம் அவர் உங்கள் அனைத்து விவரங்களையும் பார்க்க முடியும். இதன் காரணமாக உங்கள் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
- உங்கள் பேங்க் சான்றுகளையோ அல்லது உங்கள் போனில் பெறப்பட்ட OTPயையோ யாருடனும் ஷேர் செய்து கொள்ள வேண்டாம். ஆன்லைன் பேங்க் சேவையின் போது நீங்கள் சிக்கல்களை எதிர்கொண்டால், அந்தச் செயல்முறையை நிறுத்திவிட்டு பேங்கை தொடர்புகொள்ளவும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile