தொழில்நுட்ப நிறுவனமான Apple தனது சமீபத்தியMacBook Pro மாடல்களை செவ்வாயன்று வெளியிட்டது. அவை M3 குடும்ப ப்ரோசெசர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. புதிய லேப்டாப்பில் லிக்விட் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. பயனர்கள் 22 மணிநேர பேட்டரி ஆயுளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆப்பிளின் புதிய M3, M3 Pro மற்றும் M3 Max சில்லுகள் TSMCயின் 3nm பர்போமான்ஸ் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன. புதிய மேக்புக் ப்ரோவை இந்தியாவிலும் வாங்கலாம். அவற்றின் விலை மற்றும் பிற அம்சங்களை பற்றி பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய M3 MacBook Pro 14 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் M3 சிப் கொண்ட விலை ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 900. M3 ப்ரோ ப்ரைட்னாஸ் உடன் கூடிய 14 இன்ச் வேரியண்டின் விலை ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 900 முதல் தொடங்குகிறது. அதே சமயம் 16 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ப்ரோவின் பேஸ் மாடலின் விலை ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 900 முதல் தொடங்குகிறது. மூன்று மாடல்களும் சில்வர் மற்றும் ஸ்பேஸ் ப்ளாக் நிற விருப்பங்களில் கொண்டு வரப்பட்டுள்ளன.
நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, ஆப்பிளின் அனைத்து புதிய மேக்புக் ப்ரோ (2023) மாடல்களும் நிறுவனத்தின் புதிய M3, M3 Pro மற்றும் M3 Max ப்ரோசெசருடன் போருத்தப்ப்கட்டுள்ளது, M3 மேக்ஸ் சிப்பைக் கொண்டிருக்கும் டாப் வேரியண்ட் 128ஜிபி வரை ரேம் மூலம் கட்டமைக்கப்படலாம். இதுவே நிறுவனத்தின் எந்த லேப்டாப்பிலும் இதுவரை வழங்கப்படாத அதிகபட்ச ரேம் ஆகும். M3 மற்றும் M3 Pro ப்ரோசெசர்கள் பொருத்தப்பட்ட மாடல்கள் முறையே 24GB மற்றும் 36GB ரேம் கொண்டதாக இருக்கும்.
இந்த ஆண்டு ஆப்பிள் இரண்டாவது முறையாக மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை நினைவில் கொள்க. நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் M2 ப்ரோசெசருடன் கூடிய MacBook Pro மாடலை அறிமுகப்படுத்தியது. இப்போது தொடங்கப்பட்ட மேக்புக்களில் 1TB வரை SSD ஸ்டோரேஜ் உள்ளது. புதிய M3 ப்ரோ செயலி காரணமாக, அதன் மேக்புக்ஸ் 40 மடங்கு பாஸ்ட் மாறியுள்ளதாக ஆப்பிள் கூறுகிறது.
இதையும் படிங்க: Amazon Sale 2023: Smartwatch யில் கிடைக்கிறது அதிரடி ஆபர்
புதிய மேக்புக் ப்ரோ மாடல்களில் 14 இன்ச் மற்றும் 16 இன்ச் லிக்விட் ரெடினா எக்ஸ்டிஆர் (3,024×1,964 பிக்சல்கள்) டிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1600 nits (HDR கன்டென்ட் மற்றும் 600 nits (SDR கன்டென்ட் ) ஹை ப்ரைட்னஸ் இது டச் ஐடியை ஆதரிக்கிறது மற்றும் பேக்லிட் கீபோர்டுடன் வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டி விருப்பங்களில் Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3, மூன்று தண்டர்போல்ட் 4/USB 4 போர்ட்கள், ஒரு MagSafe 3 சார்ஜிங் போர்ட், ஒரு SDXC கார்டு ரீடர், ஒரு HDMI போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும்.